எனது தோட்டத்திலும் சில வண்ணத்துப்பூச்சிகள்

ஆசிரியர்: பழ.புகழேந்தி

Category கவிதைகள்
FormatHardbound
Pages 80
ISBN978-81-945795-4-0
Weight300 grams
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சேலத்தில் இயங்கும் 'சொற்கூடு' அமைப்பின் புலனக் குழுவில் இக்கவிதைகளை அவ்வப்போது பகிர்ந்தேன். அவற்றுக்குக் கிடைத்த பாராட்டுகளும், குழுவினர் அளித்த ஊக்கமுமே இத்தொகுப்புக்குக் காரணம். என் கவிதைகளை தொகுப்பாவதற்கு முன் பொதுவெளிப் பார்வைக்கு நான் வைத்ததில்லை , சில அரசியல் கவிதைகள் தவிர. அதிலிருந்து விலகி முதன்முதலாய்த் தொகுப்பாகி இருக்கிறது இக்கவிதைகள். ஒரு வகையில் இக்கவிதைகள் தொகுப்பாவதற்கு பொதுவெளியில் பகிர்ந்ததே காரணமாகவும் இருந்திருக்கிறது. ' சொற்கூடு ' குழுவுக்குள் இருக்கும் தோழர் பரிதி நான் பகிர்ந்த முதல் பத்து கவிதைகளைப் படித்துவிட்டு மறுநாள் அலைபேசியில் அழைத்தார். கவிதைகளைப் பாராட்டியவர், " இவற்றை நிறுத்திவிடாதீர்கள், தொடர்ந்து எழுதுங்கள். எனது பரிதி பதிப்பகத்தின் சார்பாக இதை வெளியிட விரும்புகிறேன் என்று உற்சாகமூட்டினார். இதோ, அவர் சொன்னதை நான் செய்தேன். அவர் சொன்னதை அவரும் செய்திருக்கிறார். அதுவும், நான் எதிர்பார்க்காத தரத்தில்கூடவே நான் எதிர்பார்த்த தரத்தில் இதை வடிவமைப்பு செய்து கொடுத்தவர் நண்பர் சுகபாலா. அவரது பணிச்சுமையையும், சூழலையும் நான் நன்கறிந்தவன். அந்த இடர்ப்பாடுகளுக்கு இடையிலும் இதைச் செய்து கொடுத்தார் அவர்.' நன்றி' என்ற ஒற்றைச்சொல் தவிர இவர்களுக்குச் சொல்ல வேறென்ன இருக்கிறது.

- பழ.புகழேந்தி.

உங்கள் கருத்துக்களை பகிர :
பழ.புகழேந்தி :

கவிதைகள் :

பரிதி பதிப்பகம் :