எனது சுதந்திரப் போர் 1920

ஆசிரியர்: நேதாஜி

Category வாழ்க்கை வரலாறு
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaper Back
Pages 240
Weight250 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here






இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திரக் கூட்டம், பஞ்சாப்பிலுள்ள அமிர்தசரஸில் டிசம்பர் 1919 இல், அந்த வருடத்தில் ஏற்கனவே நடந்த அராஜகச் செயல்களின் நிழலில் நடந்தது. சி.ஆர்.தாஸ், பி.சி.பால், பி. சக்கரவர்த்தி போன்ற வங்கத் தலைவர்களின் எதிர்ப்பிருந்தபோதும், புதிய அரசியல் சட்டத்தைச் (இந்திய அரசுச்சட்டம், 1919 என்றழைக்கப்பட்ட) செயற்படுத்தவும், அது உருவாவதில் முக்கியப் பங்காற்றிய இந்திய அரசுச் செயலாளர் மாண்டேகுவிற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் இயற்றப்பட்டது. அமிர்தசரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவிற்குப் பெரும் பங்காற்றிய காந்தி, 1919 டிசம்பர் 31-ஆம் நாளது 'யங் இந்தியாவில் எழுதினார்: 'பொது அறிவிப்புச் செய்தியோடு கூடிய சீர்திருத்தச் சட்டமானது இந்தியாவிற்கு நீதி செய்ய வேண்டுமென்பதில் பிரிட்டிஷாருக்குள்ள ஆர்வத்தைக் கொண்டுள்ளது. எனவே நமது கடமை சீர்த்திருத்தங்களை இடக்குப் பேசி விமர்சிக்காது அவைகள் வெற்றியடையும்படி நமது வேலைகளில் ஈடுபடுதலாகும்.'


உங்கள் கருத்துக்களை பகிர :
நேதாஜி :

வாழ்க்கை வரலாறு :

வ.உ.சி.நூலகம் :