எதிர்பாராத முத்தம்

ஆசிரியர்: பாரதிதாசன்

Category கவிதைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 78
Weight100 grams
₹30.00 ₹29.10    You Save ₹0
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



1938-ஆம் ஆண்டு அச்சேறிய அரிய காப்பியம், இந்த எதிர்பாராத முத்தம்', 'பொன்முடி' எனும் புதுப்பெயர் ஏற்றுத் திரை நாடகமாகத் தமிழகத்தில் புரட்சி உலா வந்த வெற்றித் தமிழ்த்திரை ஓவியம்.
குடும்பப்பகை, கருத்தொருமித்த காதலரைப் பிரிக்கின்றது; பிரிவில் துடிக்கின்றனர். வடநாட்டில் இருவரும் ஒருவரை ஒருவர் இனங்கண்டு தாவுகின்றனர். அன்று வாலியைக் கொன்ற இராமனைப் போன்று வைதிகப் பார்ப்பனர் மறைந்திருந்து காதலனைத் தாக்குகின்றனர். சாகின்றான்; சாகின்றாள். சவக்காட்டில் ஒன்றுபடும் தமிழ் உள்ளம்' ஓவியமாகிறது.
நேர்ந்தோடும் இருமுகமும் நெருங்கும்போது நெடுமரத்தின் மறைவினின்றுநீள் 'வாள்' ஒன்று பாய்ந்ததுமேல்! அவன் முகத்தை அணைத்தாள் தாவிப் பளீரென்று முத்த மொன்று பெற்றாள்! சேயின் சாந்த முகத்தனைக் கண்டாள் உடலைக் காணாள்! தலை சுமந்த கையோடு தரையிற் சாய்ந்தாள்! தீந்தமிழர் உயர்வினுக்குச் செத்தான்! அன்பன் செத்ததற்குச் செத்தாள் அத்தென்னாட்டன்னம்! புரட்சிக் கவிஞர் இக்காவியத்தைத் தமிழ்ப் பண்பாடு எது எனத் தமிழர் உணர்ந்து போற்றி நல்வாழ்வு பெற வேண்டும் என்ற நோக்கிலேயே தீட்டியுள்ளார். இந்த நறுங்காப்பியத்தைத் தமிழ் கற்றுக் கருத்தேற்றுத் தன்னுணர்வு பெற்றிட நாட்டுடைமையாக்கிய நற்றமிழ் உள்ளத்தை வாழ்த்தி வணங்கி உங்களிடம் அனுப்புகின்றோம். ஏற்க! கற்க! எழில் வாழ்வு பெறுக!

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

பூம்புகார் பதிப்பகம் :