எண்ணமே வாழ்வு

ஆசிரியர்: எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம்

Category சுயமுன்னேற்றம்
Publication யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
FormatPaperback
Pages 208
First EditionNov 1955
29th EditionAug 2016
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹90.00      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


அறிவு உலகில் நான் பிறந்ததும் கண்களைச் சுழற்றி இங்குமங்கும் ஒரு முறை பார்த்தேன்; மறுமுறை பார்த்தேன்; மீண்டும் ஒருமுறை பார்த்தேன்; எங்கும் துன்பங்களும் துயரங்களும் நிறைந்திருப்பதைப் பார்த்தேன், நோய்களும் நொம்பலங்களும் நிறைந்திருப்பதைப் பார்த்தேன் ; ஏமாற்றமும் அழுகையும் நிறைந்திருப்பதைப் பார்த்தேன். ஒரு பக்கல் கோடிக்கணக்கானோர் தங்களின் வாழ்க்கைக் கப்பலைப் பெரும்பாறையில் கொண்டுபோய் மோதிச் சுக்கு நூறாக்கி விட்டுத் தலையிலே கையை வைத்த வண்ணம் அழுது கொண்டிருப்பதையும் பார்த்தேன். மற்றொரு பக்கல் கோடிக்காணக்கானோர், "வாழ்க்கைக் கதவு எங்களுக்குத் திறந்து வழிவிட மாட்டேன், என்கிறதே'' என்று ஏங்கித் தவித்துத் தங்களின் இதயக் கோட்டையைச் சுக்கு நூறாகிக்கிக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :