எண்ணங்கள் எதிரொலிகள்
ஆசிரியர்:
அ.கி வேங்கட சுப்ரமணியன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1834-9902-2674-5859
{1834-9902-2674-5859 [{புத்தகம் பற்றி கல்வித்துறையில் பல்வேறு பதவிகள் வகித்து, ஒவ்வொரு பதவியிலும் புகழ் முத்திரை பதித்து, இன்று இந்திய அரசுத் திட்டக்குழு உறுப்பினராக உயர்ந்து, அப்பணிக்கு அணி செய்து வரும் டாக்டர் கி. வேங்கடசுப்பிரமணியன் அவர்கள் பல்மொழிப் புலமையும் பல்துறைத் திறமையும் அமையப் பெற்றவர். பாரதப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துப் பெருமை பெற்றவர். எழுத்து, பேச்சு, செயல் எல்லாவற்றிலும் தனக்கென ஒரு தனித் தன்மையை வகுத்து விதுரத்தன்மையோடு செயல்படுபவர்.
<br/>மகாபாரதத்தில் விதுரன் எந்தப் பக்கமும் சாயாமல் நியாயத்திற்காக வாதிட்டார். அநீதி கண்டு கொதித்தெழுந்தார். எண்ணங்கள் எதிரொலிகள் என்ற இந்நூலில் டாக்டர் கி. வேங்கடசுப்பிரமணியன் அவர்கள் தனது எண்ணங்களை எதிரொலிக்கச்செய்து நியாயத் தீர்ப்புகள் வழங்குகிறார். இந்நூலில் நனிசிறந்த இருபத்தினான்கு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றைப் படிக்கின்ற ஒவ்வொருவர் உள்ளத்திலும் பலமுனை அறிவு வந்து பதியும். அறிஞர்களின் உள்ளங்களில் எழுந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு இந்நூலில் விடை கிடைக்கும். இதோ ஆசிரியரின் எண்ணங்கள் எதிரொலிக்கின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866