எட்டும் தூரத்தில் IAS

ஆசிரியர்: க.விஜயகார்த்திகேயன்

Category பொது அறிவு
Publication விகடன் பிரசுரம்
Formatpaper back
Pages 128
First EditionJun 2014
5th EditionApr 2018
ISBN978-81-8476-591-5
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய முடியும்? உங்கள் கையில் அரசின் அதிகாரம் இருந்தால்... எதையும் சாதிக்க முடியும். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவேண்டும், எளியோருக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். ஆம்! இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணிதான் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நிர்வாகத் திறமையால் நற்பணிகள் செய்யும் திறன்வாய்ந்தது ஐ.ஏ.எஸ். பணி. நம் நாட்டின் எதிர்காலத் தேவை நல்ல நிர்வாகிகள். நம் அரசின் செயல்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய திறன் உங்களிடத்திலும் இருக்கலாம். ஆனால், ‘ஐ.ஏ.எஸ்., தேர்வு கடினம். தேர்ச்சி பெறுவதே குதிரைக் கொம்பு’ என்றெல்லாம் பேசுபவர்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். ‘தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்வது எப்படி? ஒவ்வொரு தேர்வையும் எப்படி எழுத வேண்டும்? எளிதாக எப்படி விடையளிக்கலாம்?’ போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் இந்த நூலாசிரியரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான விஜயகார்த்திகேயன். அற்புத டிப்ஸ்களையும் அள்ளி வழங்கி இருக்கிறார். தன்னுடைய தேர்வு அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தையும் அற்புதமான நடையில் வடித்துத் தந்துள்ளார். இந்திய ஆட்சிப் பணிக்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளத் துணிந்தவர்களுக்கு, சாதிக்க துடிப்பவர்களுக்கு சத்துள்ள நம்பிக்கை டானிக் இந்த புத்தகம். படியுங்கள்... அதிகாரத்தை எட்டிப் பிடியுங்கள்.

தற்சமயம் கோவில்பட்டியில் சார் ஆட்சியராக அதாவது சப் கலெக்டராகப் பணி புரிந்துவருகிறேன். இந்தப் புத்தகம் மூலமாக உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.நான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இந்தப் புத்தகத்தை எழுதவில்லை . உங்களுக்கு முன் இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற ஒரு நண்பனாகவும் சக மாணவனாகவும் புத்தகத்தை எழுதுகிறேன். யூ.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள், படிக்க வேண்டிய பாடங்கள், சில எளிய யுக்திகள், தேர்வுக்குத் தயாராகும்போது செய்ய வேண்டியவை மற்றும் கூடாதவை போன்றவற்றைப் பற்றி என் அனுபவங்களையும் சேர்த்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

28 வயதாகும் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் மதுரையில் பிறந்தவர். மதுரை, மகாத்மா மான்ட்டிசோரி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தபின் சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் 2009 -ல் இளநிலைப் படிப்பை முடித்து, எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். 2010-ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று 2011 பேட்ச் இன்டியன் அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அதன் பின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மசூரி நகரில் இருக்கும் லால் பஹதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷனில் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெற்றார். 2012-ல் ஈரோடு மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரிந்து தன் பயிற்சியை முடித்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.விஜயகார்த்திகேயன் :

பொது அறிவு :

விகடன் பிரசுரம் :