ஊழி நூல் அண்டம் உயிர்த்தோற்றம் ஊழிக்காலம்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category சமூகம்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatPaperpack
Pages 256
Weight1.00 kgs
₹400.00       Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"ஊழி நூல்" உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள் அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கண் நொடிக்கும் நேரத்துக்குள் உயிர்களைச் சுருட்டிக் கொண்டு போகும் இயற்கையின் சீற்றம் அல்ல ஊழி என்பது. இவ்வண்டத்தில் ஆக்கம் ஒருபுறமும் அழிவு ஒருபுறமும் தொடர்ந்து படைப்பாற்றலால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பொருந்தும் உயிர்கள் தப்பிப் பிழைப்பதும் பொருந்தாதவை தடயமில்லாமல் அழிந்து போவதும் ஊழியின் விளைவுகள்.

பன்னெடுங்கால வரலாற்றில் பல ஊழிகளை இப்புவியும் இங்கு வாழும் உயிரினக் கூட்டமும் சந்தித்திருக்கிறது. அவ்வாறு ஒவ்வொருமுறை ஊழி நிகழும்போதும் ஊழி குறித்து அறிவித்து எச்சரிக்கை செய்யும் வகையிலும் ஊழியில் தப்பும் வழிகளை உணர்த்தும் வகையிலும் ஊழிக்குப் பிந்தைய வாழ்க்கையைக் கட்டமைக்கும் வகையிலும் அந்தந்த காலத்துக்குத் தகுந்த மாதிரியான ஏற்பாட்டை படைப்பாற்றல் செய்யத் தவறுவதில்லை என்பதற்கு நம் மரபில் பல சான்றுகள் உள்ளன.

அப்படியான ஓர் ஏற்பாடாகத்தான் என்னால் "ஊழிநூலை" ப் பார்க்க முடிகிறது.

நூலின் உள்ளடக்கக் கருத்துகள் எந்த அளவுக்கு ஆழமானதோ அர்த்தம் நிறைந்ததோ அந்த அளவுக்கு இந்த நூலில் உள்ள ஒவ்வோர் ஓவியமும் பொருள் செறிந்தவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.செந்தமிழன் :

சமூகம் :

செம்மை வெளியீட்டகம் :