ஊருக்கு நல்லது சொல்வேன்

ஆசிரியர்: சுகி சிவம்

Category சுயமுன்னேற்றம்
FormatPaperback
Pages 128
ISBN978-81-8345-146-8
Weight150 grams
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇளமை ததும்பும் ஆன்மிகம் கட்டுக் குடுமி... கழுத்தில் ருத்திராட்சம்... மேல் துண்டில்லாத திறந்த நெஞ்சு... சில சமயம் மழிக்கப்பட்ட முன்தலை... காதில் கடுக்கன்... நெற்றி கொள்ளாத திருநீறு அல்லது திருமண்... என்கிற பழைய நூற்றாண்டுப் பக்தர்கள் காணாமல் போய் விட்டார்கள்.ஆனால் தூக்கலான Denim வாசனை, ஜீன்ஸ் பேன்ட் சகிதமாக ஸ்ப்லென்டர் மோட்டார் பைக்கிலிருந்து கோக் டின் சகிதமாகப் பூமிக்கு நழுவும் இளைய பாரதத்தின் கழுத்தில் பளிச்சென்று ஒரு ருத்திராட்சம் தெரிகிறது. இளைய பாரதத்தின் நெஞ்சுக் குழியில் பக்தி பாதுகாப்பாகவே இருக்கிறது. கழுத்தை ஒட்டிய தங்கச் சங்கிலியால் ஒரு டாலர் மாதிரிக் கிடக்கும் ருத்திராட்சம் வெறும் Fashion சமாச்சாரமோ என்று குடைந்து பார்த்தால் பதில் வேறு மாதிரி வருகிறது.பூண்டி ஈசா யோக மையத்தின் யோகா பயிற்சி, சின்மயா யுவக் கேந்திராவின் youth camp, ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் பஜன், மேல்மருவத்தூர் தொண்டர் இப்படி ஒரு சமய இயக்கங்களில் அவனுக்கு மன்னிக்கவும், அவருக்கு ஏதோ ஒரு பங்களிப்பு இருக்கிறது!

நல்லது சொன்னால் நம்மைப் பலருக்கும் பிடிக்காமல் போய்விடும் என்று பலர் பயப்படுகிறார்கள். அதனால் மேடை களைக் கூட பலர் விளையாட்டு அரங்கம் போல குஷிப்படுத்தும் களமாக ஆக்கி விட்டார்கள். மக்களை மேலும் மேலும் பள்ளத்தில் தள்ள பலநூறு பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் படையெடுக்கத் தொடங்கி விட்டனர். பாரதி போல், சமூக அங்கீகாரத்தைப் பற்றிய கவலையே இல்லாமல், ஆன்மாவிலிருந்து பேசும் துணிச்சல் ஓரளவு எனக்கும் உண்டு. “மோதி மிதித்து விடு பாப்பா... அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா” என்கிற வெப்பத்தை என்னுள் விதைத்தவன் பாரதி. அவனளவு என்னால் மனம் திறக்க முடியாமல் போனாலும் அதே மரபணுவில் வந்த தமிழ் என் தமிழ். நான் முகத்தில் உமிழ்வதில்லை. ஆனால் மோதி மிதித்துவிடுவேன்.தனிமனித லாப நஷ்டங்களைப் பற்றி மட்டுமே கணக்குப் பார்க்கிற இந்தியத் தமிழர்கள் சமூக நன்மைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாமா என்கிற கோபம் எனக்கு எப்போதும் உண்டு. அந்த அக்கினிக் குஞ்சுகள் இக்கட்டுரைத் தொகுப்பில் உங்களுக்குப் புலப்படும். ஒரு சரியான உதாரணம் சுதந்திரச் சிந்தனை என்கிற கட்டுரை. போலீஸ் துறை லத்தியைப் பயன்படுத்தும் அளவு புத்தியைப் பயன்படுத்தினால் சுதந்திரம் அர்த்தம் பெறும் என்று கருதுகிறவன் நான். தமிழ்நாட்டில் தெய்வங்களுக்குத் தேவைக்கு மேலேயே கோயில்கள் கட்டிவிட்டார்கள். முருகனுக்கே ஜாதி ஜாதியாக அடுத்தடுத்து கோயில்கட்டி போட்டி போட்டு விழா நடத்தும் அசடுகளின் தேசம் இது. சமயச் சொற்பொழிவாளனாக வாழ்வைத் தொடங்கினாலும் இந்த ஜாதிய சமயவழி என்னால் சகிக்க முடியாதது. அதுமட்டுமல்ல கோயில் வசூல் என்று.

"சமூக அக்கறையுடன் என் நாவும் பேனாவும் சுழல்கிறது என்பதற்கு இந்தச் சின்னப் புத்தகம் சாட்சி சொல்லும். பல்வேறு பத்திரிகைகள் வெளியிட்ட கட்டுரைகளின் தொகுப்பே இது. பாரதியின் ஆவேசம் அடிநாதம் ஆனதால் பாரதி வரியிலேயே ஊருக்கு நல்லது சொல்வேன்' என்ற தலைப்பைத் தந்தோம்."பாரதியை நிகழ்காலம் நிராகரித்து வேதனைப்படுத்திய மாதிரி பாரதி உணர்வுடைய எங்களைக் காயப்படுத்தவில்லை . அது சமூகம் வளர்ந்திருப் பதற்கு அடையாளம். பட்டினியும் ஏழ்மையும் பாரதிக்களிக்கப்பட்டது மாதிரி எங்கள் மீது திணிக்கப்படவில்லை . அந்த அளவுக்கு எம் போன்ற சமூக ஆர்வலரைப் பாதுகாக்க மிகப் பெரும் வாசகர்கள், நல்லுள்ளங்கள் பெருகி இருப்பது தமிழினத்தின் நல்லூழ், மிக மிக நல்ல வாழ்வைச் சமூகம் எனக்களித்திருப்பதற்கு நன்றிகள் ஆயிரம்.''

உறுதி இருந்தால் உலகை வெல்லலாம்; முயற்சி திருவினையாக்கும், 'உங்கள் வாழ்வு உங்கள் கையில்' என நல்ல பல அறிவுரை களின் சாராம்சத்தைக் கொண்ட 16 கட்டுரைகளின் முழு வடிவம் 'ஊருக்கு நல்லது சொல்வேன்'. கவிதா பப்ளிகேஷன் வெளியிடும் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின் எட்டாவது நூல் இந்நூல் இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான அரிய, நல்ல விஷயங்களை, ஆணித்தரமான வாதங்களுடன் அற்புதமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார். ஆசிரியருக்கு எங்களது மனமார்ந்த நன்றி. நூலினை வாங்கிப் படித்து மகிழப்போகும் வாசக நெஞ்சங்களுக்கு வாழ்த்துகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

சுயமுன்னேற்றம் :

கவிதா பதிப்பகம் :