ஊருக்கு செல்லும் வழி
ஆசிரியர்:
கார்த்திக் புகழேந்தி
விலை ரூ.75
https://marinabooks.com/detailed/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF?id=5+0235
{5 0235 [{புத்தகம் பற்றி “கரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையைப் பற்றி சொல்லத் தொடங்கினால், அதன் நீள அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள், திண்ணையில் நடந்த சம்பவங்கள் என செய்திகளைச் சுவைபட அடுக்கிக் கொண்டே போவார். கார்த்திக்கும் இதையே செய்கிறார். செவ்வந்திப் பூ மாலையில் பச்சிலைக் கொத்துக்களையும் இடையிடையே வைத்துக் கட்டுவது போல.
<br/>வாயால் நிறையபேர் நிறையச் சொல்லுவார்கள்,கேட்பவர்களை அங்கே இங்கே அசையவிடாமல் கட்டிபோட்டு விடுவார்கள்.ஆனால் அதை எழுத்தாகும் திறன் சிலரிடம்தான் உள்ளது.கார்த்திக் புகழேந்தியிடம் அது நிறைய்ய உள்ளது."} {அணிந்துரை ஒரு மனிதனின் வாழ்க்கை கண்விழிக்கும் நேரத்தில் அவனோடு வேட்கை ஒட்டிவிடுகிறது. அவன் தன்னையல்லாத எல்லோரையும் நேசிக்கும் ஒரு மகத்துவத்தை அடைந்து விடுகிறான். அலைக்கழிப்பும் வறுமையும் கனவுகளும் கலக்கங்களும் செருப்பில்லாத அவனின் காலடித்தடங்களை சுவடு எடுத்தபடியே பின்தொடர்கிறது. வாழ்வு ஒரு வேட்டை நாய். நம் வாழ்தல் அதற்கொரு இரை. அதிலிருந்து தப்பியவர் யாருமிலர். எக்கச்சக்கமான குருவிகள் வயலுக்குள் இருந்து ஒரேநேரத்தில் சிறகு விரித்து மேலெழும் காட்சியைப் போல கார்த்திக் புகழேந்தியின் ஊருக்கு செல்லும் வழியெங்கும் சம்பவங்களின் அனுபவங்கள் எழும்பிப் பறக்கின்றன. ஆனால் அவைகளுக்கு சிறகுகள் மட்டுமல்ல சிலுவைகளும் உண்டு.
<br/>கார்த்திக் புகழேந்தியை சமகால தமிழ் இலக்கியப்பரப்பில் அறியாதவர் இருக்கமாட்டார்கள். அவரின் சிறுகதைகள் தனது பிரதேசத்தன்மையை இழக்காத ஓர்மம் கொண்டவை. அந்தவகையில் நான் அவரைக் கொண்டாடுவேன். அவரைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்திருப்பேன். பேனாவும் காகிதமும் கிடைத்துவிட்டால் எழுத்தாளனாய் ஆகிவிடலாம் என நம்புவர்கள் அதிகரித்திருக்கும் சூழலில் சமூகத்தில் எழுத்தாளனாய் அறியப்பட்டவரின் கடந்தகாலமே “ஊருக்கு செல்லும் வழியில் உலவிக்கொண்டிருக்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866