ஊமைச்செந்நாய்
ஆசிரியர்:
ஜெயமோகன்
விலை ரூ.245
https://marinabooks.com/detailed/%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?id=1181-9128-4362-3473
{1181-9128-4362-3473 [{புத்தகம் பற்றி 'ஊமைச்செந்நாய்' கதைபற்றி எனக்கு வந்த ஒரு கடிதம் சுவாரசியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டது. 'ஊமைச்செந்தாய் கதையில் வெள்ளைக்காரன் பேசும் ஆங்கிலம்கூட சரியாக இருந்தது' என்றது அது... ‘வெள்ளையர் அக்காலகட்டத்தில் பேசிய சில வசைச்சொல்லாட்சிகள் நம்முடைய கிராமத்து மக்களின் நினைவில்கூட உள்ளன. அவை இந்திய ஆங்கிலமாகவே நிலைத்து விட்டன. உதாரணம் கண்ட்ரி புரூட். அத்தகைய சொல்லாட்சிகளை அந்த வெள்ளையன் வாயில் இருந்து கேட்டபோது நீங்கள் எதையெல்லாம் ஆய்வு செய்திருக்கிறீர்கள் என்ற ஆச்சரியம் ஏற்பட்டது.'
<br/> இம்முறை எனக்கு ஆச்சரியம், ஏனென்றால் நான் அப்படி ஆராய்ச்சி ஏதும் செய்யவில்லை. ஒரு புனைவுக்கான களத்தை ஆர்வம் காரணமாக அறிய வேண்டுமே ஒழிய ஆராய்ச்சி செய்யக்கூடாதென்பதே என் கொள்கை. எழுதும்போது தகவல்களைச் சொல்லும் நினைவு என்பது கற்பனையை குறுக்கும் இரும்புத்தளை, படைப்பு என்பது எனக்கு ஒரு பெரிய விழிப்புநிலை கனவுதான். கனவு போலவே நான் அறிந்தவை என் அச்சங்கள் ஆவல்களுடன் கலந்து இன்னொன்றாக படைப்பில் இருக்கும். நானே அதை வாசித்து வியப்பேன்!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866