உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category ஆய்வு நூல்கள்
Publication யாத்திசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 168
First EditionJan 2014
0th EditionJan 2014
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$6      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

உலக மொழிகளில் தமிழே முதன்மொழி மூத்த மொழியென்று பல்வேறு தமிழறிஞர்களும், மேலை நாட்டு மொழியியலாரில் பலரும் கூறிவரும் நிலையில், தமிழ் முதன்மொழியன்று, எங்களது மொழியே முதன் மொழியென்று கூற, உலகின் எம்மொழியைச் சார்ந்தவர்களும் இது வெரையில் முன்வரவில்லை . அப்படி முன் வருவாராயின், அதற்கானச் சான்றுகளை அளித்திட வேண்டும். அச்சான்றுகளுக்கு அடிப்படையான வரலாற்றைத் தெளிவாக்கவேண்டும்.
வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மொழிகளாக அறியப்பட்ட செமிட்டிக் இன மொழிகளும், சுமேரியமும், அக்காடியமும், கனானியமும். எகிப்தியமும் இறந்துவிட்ட நிலையில், இன்றைக்கு எபிரேயம் என்ற மொழி மட்டுமே. பேச்சுவழக்கிலும் எழுத்து வழக்கிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எபிரேய மொழி வல்லுநர்கள் கூட, தங்கள் மொழியே உலகின் முதன் மொழியென்று கூறமுன்வரவில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :