உலக சினிமா: ஆளுமைகள் நேர்க்காணல்கள்

ஆசிரியர்: ராம் முரளி

Category நேர்காணல்கள்
Publication பாதரசம் வெளியீடு
FormatPaperback
Pages 128
Weight200 grams
₹125.00 ₹112.50    You Save ₹12
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வாழ்க்கையை நிமிடங்களுக்குள் அடைத்துவிட முடியாது என்கிறார் ஹங்கேரிய திரை இயக்குனரான 'பேல தர். நீண்டு விரியும் காட்சிகளைக் கொண்ட இவருடைய திரைப்படங்களைக் காண்பது தியான நிலைக்கு ஒப்பானது என்கிறார்கள் திரைப்பட ஆர்வலர்கள். மைக்கேல் ஹனேகேவின் திரைப்படங்கள் ஒருபோதும் முடிவுறுவதில்லை . ஒரு படைப்பாளியாக தனது திரைப்படங்களை முடித்துவிடுவதில் துளி , நியாயமும் இருப்பதில்லை என்கிறார் இவர். 'தார்க்கோவ்ஸ்கி, திரைப்படங்களைப் புரிந்துகொள்ளத் தேவையில்லை; சினிமா என்பது ஒருவகையிலான தரிசனமே என்கிறார். 'மேதைகள் என்று நாம் வியக்கின்ற ஒவ்வொரு இயக்குனரும் அவர்களுக்கே உரித்தான தனித்துவத்துடன் , தம் படைப்புகளை விட்டுச் செல்கின்றார்கள். வாழ்க்கையின் மீதான தங்களது விசாரிப்புகளையும், உலகை உலுக்குகின்ற சம்பவங்களுக்கான தங்களின் எதிர்வினைகளையும் தமது படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நேர்காணல்கள் :

பாதரசம் வெளியீடு :