உலகை மாற்றிய தோழிகள்

ஆசிரியர்: சஹானா

Category மகளிர் சிறப்பு
Publication சூரியன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 176
Weight250 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நாம் இப்போது அனுபவிக்கும் ஒவ்வொரு உரிமைக்கும் பின்னால், முகம் தெரியாத யாரோ பலரின் தியாகம் இருக்கும். அப்படி தங்கள் வாழ்வின் சுகங்களைத் துறந்து சமூக மாற்றத்துக்கான விதைகளைத் தூவிய சில முன்னுதாரணப் பெண்களின் வாழ்வே இந்த நூல். ‘குங்குமம் தோழி’ இதழில் தொடராக வந்தபோதே பிரமாதமான வரவேற்பைப் பெற்றது. பெண்கள் பத்திரிகையில் வெளியான பெண்களைப் பற்றிய பகுதியாக இருந்தாலும், இது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவருக்குமானதே!உலகை மாற்றிய தோழிகளை அறியும்போது, சில விஷயங்கள் தெள்ளத் தெளிவாகின. பெண்கள் போருக்கு எதிரானவர்களாகவே எப்போதும் இருந்து வருகிறார்கள். சமூக நலனில் அக்கறை கொண்டவர்களாகவே செயலாற்றுகிறார்கள். நல்ல விஷயத்துக்காகத் துணிச்சலுடன் தன் சொந்த நாட்டு அரசியலையும் கூட எதிர்த்திருக்கிறார்கள். சிலர் தங்களின் கொள்கைக்காகவே பலியாகியிருக்கிறார்கள்.உலகில் தோன்றும் ஒவ்வொரு பெண்ணும் போராடித்தான் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது... இருப்பினும், கற்பனைக்கு எட்டாத போராட்டங்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு, உலகை மாற்றிய இத்தோழிகளை அறிந்துகொள்வதும் புரிந்துகொள்வதும் மிக அவசியம்.இனி உங்கள் வாசிப்புக்கும் சிந்தனைக்கும் காத்திருக்கிறார்கள் இந்த அபூர்வ தோழிகள்!.

உங்கள் கருத்துக்களை பகிர :
சஹானா :

மகளிர் சிறப்பு :

சூரியன் பதிப்பகம் :