உலகின் ஒப்பற்ற கட்டிடக்கலை படைப்புகள்

ஆசிரியர்: ம.லெனின்

Category வணிகம்
Publication சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ்
Pages 80
$2.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


ஈபில் கோபுரம் எங்கே இருக்கிறது என்று நேரடியாகக் கேட்டால் பாரிஸ் நகரில் என்று சொல்லிவிட்டுப் போவது குழந்தைக்குக் கூட இயலும். ஈபில் கோபுரத்தின் இருப்பிடம் பாரிஸ் என்பது ஒரு தகவல். பிரான்ஸ் என்றாலே உங்களுக்குப் பிரஞ்சுப் புரட்சி நினைவுக்கு வரும். பாரிஸ் நகரம் மனதில் நிழலாடும். அந்நகருக்குப் பெருமை சேர்க்கும் ஈபில் கோபுரம் உலகையே ஈர்ப்பதை உணர்வீர்கள். இம்மாதிரி ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல விஷயங்களை இணைத்தால் ஒரு சங்கிலிக் கோர்வை கிடைக்கும். இந்த சங்கிலிப் பிணைப்பு எவ்வளவு நீளமாக வேண்டுமென்றாலும் நீளலாம். உங்களுக்கு தெரிந்த விஷயங்கள் நிறைய இருக்கலாம். எவ்வரவுதான் தெரிந்து வைத்திருந்தாலும் தெரியாத விஷயங்களும் இருக்கத்தான் செய்யும். அவ்வாறு உங்களுக்குத் தெரியாத தகவல்களை முற்றிலும் புதிய பாணியில் உங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான் இந்த முயற்சி. வரலாறு படிப்பவர்களுக்கு இது அருமையான துணைவனாக விளங்கும். சுற்றுலா செல்ல விருப்பம் கொண்டவர்கள் புதுப் புது இடங்கள் பார்வையிட வழி காட்டும். உங்கள் பொது அறிவு மேம்படும். நினைவாற்றல் வலுப்படும். உங்களிடம் யாராவது மாறான கருத்துகளைத் தெரிவிக்க நேர்ந்தால் அவற்றை ஆணித்தரமாக மறுத்து வாதிட்டு வெற்றி பெறவும் இதிலுள்ள தகவல்கள் உங்களுக்கு உதவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :