உலகப் பெரியார் காந்தி

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category பகுத்தறிவு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 64
Weight50 grams
₹20.00 ₹19.00    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மேட்டினைப் பூந்தோட்டமாக்க விதைகொண்டு வந்த வேளையில் பாம்பொன்றினால் இறந்த தோட்டக்காரனைக் கண்டு புலம்புவதும், பாம்பை அடித்துக் கொல்வதும் மட்டுமல்ல, குடும்பத்தாரின் கடமை, இறந்து கிடப்பவரின் கரத்திலே, உள்ள, விதையை எடுத்துப் பார்த்து விம்மி விம்மி அழுதார், பிறகு, இவைகளைத் தூவி இங்கு பூந்தோட்டம் காண விரும்பினார், அவர் மறைந்தார், விதையோ இருக்கிறது இதோ, இதைத் தூவுவேன், இதோ இருக்கிறது, பூந்தோட்டம் காண்பேன், அந்த உருவில் அவரைக் காண்பேன், அந்த மனத்திலே அவர் பெருமை தெரியக் கண்டு மகிழ்வேன். அவர் செய்து வந்த பணியை, நான் மேற்கொள்வேன் என்று கூறவேண்டும். மறைந்த உத்தமர், மத ஆதிக்க வெறியால் கொல்லப்பட்டார். அந்தக் கொடும் பாம்பை, ஒழித்தாக வேண்டும். அவர் அனைவரும் ஒன்று, எனும் அன்பு மார்க்கக் கருத்தைத் தூவி வந்தார், அதை நாம் செய்து முடிப்போம், என்பதே, நமது உறுதியாக இருக்க வேண்டும்.
புத்தர் காலத்திலே நடந்தேறியது போல, புதிய வழியைக் கொள்வோம் என்ற உறுதி கொண்டு உழைப்பதே, நாம் அந்த உத்தமருக்கு எழுப்பக் கூடிய நிலையான ஞாபகச் சின்னம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

பகுத்தறிவு :

கௌரா பதிப்பக குழுமம் :