உலகத்துச் சிறந்த நாவல்கள்

ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம்

Category வரலாறு
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper Back
Pages 256
First EditionMay 2016
ISBN978-93-8430-184-2
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலக இலக்கிய நாவல் பரப்பில் எத்தனை விதமான சிருஷ்டிகள் இருக்கின்றன என்பதைத் தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள இந்நூல் பயன்படும் என்றே நம்புகிறேன். வெறும் சுவாரசியக் கதையான ஐவன்ஹோ முதல், ஒரு தலைமுறையின் சரித்திரமாகிய கிழவன் வரையில், அந்தரார்த்தங்கள் தொனிக்கும் கனவுக் கதையான விசாரணை முதல் நேரடியாகத் தத்துவப் பிரச்சனைகளை நோக்கும் மந்திர மலை வரையில், காவிய நயத்துடன் இதிஹாஸ புராண எல்லையை எட்டும் கெஸ்டாவின் கதை முதல் அரசியல் திண்டனுடன் ஒரு கிராமம் அழிந்த காரியத்தை விவரிக்கும் முஸ்ஸோலினி ராஜ்யம் வரையில், ஒரு தனிமனிதனின் போராட்டத்தை வெவ்வேறு பகைப் புலன்களில் விவரிக்கும் நிலவளம், மீன் கிறிஸ்தோஃப், திமிங்கில வேட்டை முதல் ஒரு குலத்தின் போராட்டத்தை விவரிக்கும் குடியானவர்கள் வரை, நாவலில் எல்லா ரகங்களையும் தர வேண்டும் என்று எண்ணி இந்த நாவல்களைத் தேர்ந்தெடுத்தேன். கரமஸாவ் சகோதரர்கள் போன்ற, நாவல் கலையின் எட்டி அளக்க முடியாத சிகரங்கள் ஒன்றிண்டும், இருப்பது நல்லதென்று தோன்றியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.நா.சுப்ரமண்யம் :

வரலாறு :

டிஸ்கவரி புக் பேலஸ் :