உறையாதோ உயிர்க்காதல் கணங்கள்...!

ஆசிரியர்: ஸ்ரீகலா

Category குடும்ப நாவல்கள்
Publication கல்யாணி நிலையம்
FormatPaperback
Pages 524
Weight400 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அவள் வலியைத் தாங்கிக் கொண்டு இருந்தாள். பிரசவ வலி எத்தகைய வேதனையைக் கொடுக்க வல்லது என்பது அவனுக்குமே தெரியும். அத்தகைய வலியை அவனுக்காகத் தாங்கிக் கொண்டு இருந்திருக்கிறாள் என்றால் அவன் மீது எத்தகைய காதல் அவளுக்கு இருந்திருக்க வேண்டும். அதை உணர்ந்தவனாய், அனுபவித்தவனாய், “பேபி...” என்று காதலோடு அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவன் அளவுக்கு அவளால் காதலைக் கொடுக்க முடியவில்லை என்றாலும், அவளது காதலும் அவனது காதலுக்குச் சற்றும் குறைந்தது அல்ல. அடுத்த அரை மணி நேரத்தில் அவர்களது மகன் 'வீலென்று' கத்திக் கொண்டே மண்ணுலகில் அவதரித்தான். செவிலிப் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வர, அதைக் கண்டு வர்ஷினி, “ஹேய்... தம்பி பாப்பா பொறந்தாச்சு...” என்று சந்தோஷக் குரல் எழுப்ப… அவளது சந்தோஷம் அங்கிருந்த எல்லோரையும் தொற்றிக் கொண்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீகலா :

குடும்ப நாவல்கள் :

கல்யாணி நிலையம் :