உய்... உய்... ரசிகர் மன்றங்களின் நோக்கும் - போக்கும்

ஆசிரியர்: கோவி. லெனின்

Category சினிமா, இசை
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 136
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866யார் மீது பாசம் வைத்திருக்கிறோமோ அவர்கள் மீது உரிமையுடன் கோபம் வரும். எதை அதிகம் நேசிக்கிறோமோ, அதையே விமர்சிக்கவும் செய்வோம். அந்த மாதிரி சினிமாவை அதிகம் விரும்பும் தம்பி லெனின், அதே சினிமாவை கண்மூடித்தனமாக விமர்சிக்காமல் சினிமா மாயவலையில் மாட்டிய இளைஞர்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவே இந்நூலை படைத்திருக்கிறார்.
பண்பாட்டுப் புரட்சி(?)யில் ஆரம்பித்து விபரீதக் கனவுகள் வரை ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு செய்தியை சொல்லி முடிப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. 'கனவு காணுங்கள்' என்ற டாக்டர் அப்துல் கலாமின் வாக்கியத்தை மிகப் பொருத்தமாக ஒரு இடத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார் தம்பி. ஏன்னா இப்போதெல்லாம் சில நடிகர்கள் வீணானது மட்டுமல்ல, நிறைவேறாத கனவையும் காணத் தொடங்கிவிடுகிறார்கள். காலைக்காட்சிக்கு முன் கட்சி ஆரம்பித்து மேட்னி ஷோவுக்குள் ஆட்சியைப் பிடித்து முதல்வராகிவிடலாம்(?) என்ற லட்சிய(!)த்துடன் கட்சி ஆரம்பிக்கும் தைரிய (!?) ஹீரோக்களையும் படம் பிடித்து காட்டியிருக்கிறார் தம்பி லெனின்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோவி. லெனின் :

சினிமா, இசை :

நக்கீரன் பதிப்பகம் :