உயிர் தேடும் ஒளி நீயே

ஆசிரியர்: ஸ்ருதி வினோ

Category குடும்ப நாவல்கள்
FormatPaperback
Pages 384
Weight450 grams
₹250.00 $10.75    You Save ₹12
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமஞ்சளைப் பிசைந்து அதில் ரோஜாக்களை அரைத்து ஊற்றிய இளஞ்சிவப்பு சூரியன், தனது செந்நிறக் கிரணங்களால் இரவெல்லாம் நிலவுடன் உறவாடிய தன் பூமிக் காதலியை ஆவேசமாக ஆத்திரமாகத் தழுவியபடி புலர்ந்தான். பறவை களின் முனங்கல்கள் சோம்பலாய் அங்கொன்றும் இங்கொன்று மாகக் கேட்டுக் கொண்டிருக்க, தோட்டத்து மலர்கள் அனைத்தும் சூரியனின் உக்கிரத்தைத் தணிவிக்க, தங்களையே உதிர்த்துப் பூமியைக் குளிர்விக்கும் அழகானக் காலைப் பொழுது...
மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் புறநகர் பகுதி... தோட்டத்துடன் கூடிய வீட்டைப் பெரியதாகக் கட்டிக் கொண்டு வாழப் பிரியப்படும் பணக்காரர்கள் வசிக்கும் ஏரியா. பிரம்மாண்டத்தைத் தனதுத் தோற்றத்திலும், ஆடம்பரத்தைத் தனது அலங்காரத்திலும் காட்டிக் கொண்டு கம்பீரமாக நிமிர்ந்து நின்ற அந்த பங்களாவில் வசிப்பவர்கள் நிச்சயமாக சொர்க்கத்தை ஒரு முறையாவது பார்த்து விட்டு வந்து தான் இந்த பங்களாவை உருவாக்கியிருப்பார்கள் போலிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ருதி வினோ :

குடும்ப நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :