உயிர்மொழி

ஆசிரியர்: டாக்டர் ஷாலினி

Category இல்லற இன்பம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 128
First EditionMar 2012
5th EditionJul 2016
ISBN978-81-8476-417-8
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இயற்கையாக அமைந்துவிடும். கூடிவாழ்தல், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பகிர்ந்து அளிக்கும் தன்மை போன்ற குணங்களும் வழிவழியாக அமைந்துவிடும். ஆனால், அனைத்து உறவுகளின் மீதும் ஒருவருக்குப் பாசம் வந்துவிடாது. அதிலும் ஆண்-பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் வாய்ந்தது! கணவன்-மனைவி என்ற உறவுச்சங்கிலி இடையில் ஏற்படுவது. திருமணம் என்ற பாலம் மட்டுமே இவர்களை இணைப்பதால், அந்தஸ்து, வேலை, பொருளாதாரம், உணவுமுறை, உடை, பிறந்தவீட்டுப் பாசம் போன்ற காரணிகளால் குடும்பத்தில் சிக்கல்கள் எழும்போது அந்த உறவுப்பாலம் உடையவும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ஆண்தான் உயர்ந்தவன்... பெண்தான் உயர்ந்தவள் என்கிற ஈகோ உருவாகி, இருவருக்கும் இடையில் அன்பு நழுவும் நேரத்தில் பிரிவு என்பது நிரந்தரமாகிவிடுகிறது! இப்படி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பிரிவு ஏன் வருகிறது? இரு இனத்துக்கும் இடையே போட்டி தொடர்ந்து கொண்டே இருக்க என்ன காரணம்? ஆண்கள் மட்டும் தனித்தோ, பெண்கள் மட்டும் தனித்தோ இந்த உலகை ஆளமுடியுமா? -மனித இனம் தழைக்க, இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆண்-பெண் உறவு மேம்படவும், திருமண பந்தம் நீடிக்கவும் தேவையான வழிமுறைகளைக் காண, பல துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் தொடர்ந்து ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கும் ஆண்&பெண் உறவுச் சிக்கலை விஞ்ஞான ரீதியாக அலசி ஆராய்ந்து இந்த நூலில் எழுதியிருக்கிறார், உளநலவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி. அடிமைத் தளத்திலிருந்து விடுபடவும், தங்களுக்கான பாதுகாப்பைத் தேடிக்கொள்ளவும், கலவி வாழ்க்கையில்வீரியம்மிக்க நல்ல வாரிசுகளைக் கருவாக்கவும் ஆதிகாலத்திலிருந்தே பெண் இனம் எப்படி பரிணாமவளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்த நூல்.
ஆண்-பெண் உறவைப்போல சுவாரசியமான விஷயம் இந்த உலகில் வேறெதுவும் இல்லை. அதைப்போல ஒரு சிக்கலான விஷயமும் வேறில்லை! சரியாக அமைந்தால் கொள்ளை இன்பத்தைக் கொடுக்கக் கூடிய இந்த உறவு, சொதப்பலாக மாறினால் இருக்கும் இன்பத்தை எல்லாம் கொள்ளை அடித்துக்கொண்டே போய்விடுகிறது! நம்மூரில் திருமணத்தைப் பற்றி 'ஆஹா, ஓஹோ' என்று எல்லோரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். 'திருமணம்தான் வாழ்வின் ஒரே இலக்கு, இதை செய்துகொள்ளாவிட்டால், வாழ்க்கை முழுமை பெறாது' என்றெல்லாம் சொல்லி, வேண்டாம் என்கிறவர்களுக்கும் பலத்த சிபாரிசோடு இதை செய்துவைத்துவிடுவார்கள். "சொர்கத்தில் முடிவானது, முப்பத்தி மூன்று கோடி தேவர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது' என்றெல்லாம் சொல்லி, பெருத்த பணச்செலவில் இந்தத் திருமண வைபவத்தை நடத்தி, மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவார்கள் சரி... திருமணம் என்றால் விளம்பரங்களில் வருவதுபோல ரொம்ப ஜாலியான சமாசாரம்தானே என்று நினைத்துக்கொண்டு தம்பதியினரும் உறவைத் துவங்குவார்கள்... அப்புறம்தான் அவர்களுக்குத் தெரியும், இது எவ்வளவு சருக்கலான பாதை என்று! யாராவது ஆபத்பாந்தவர் வந்து.. இதை எப்படிச் சமாளித்து, வெற்றிகரமாகப் பயணிப்பது என்று சொல்லித் தந்து மீட்க மாட்டார்களா என்று தம்பதியினர் அல்லோலப்படும் போதுதான், எல்லா உறவுக்காரர்களும் தங்கள் பங்குக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குட்டையைக் குழப்பி, வாழ்க்கையையே இன்னும் வெறுக்க வைத்துவிடுகிறார்கள். இப்படி நொந்துபோன பலர் கோயில், கோர்ட், ஜோசியர், பார் என்றெல்லாம் சுற்றிவிட்டு, எதுவுமே உதவாதபோது கடைசியில் குடும்பநல ஆலோசனை பெற வருகிறார்கள்.
டாக்டர் ஷாலினி சென்னை மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவம் பயின்ற டாக்டர் ஷாலினி, மதுரை மருத்துவக் கல்லூரியில் முதுகலை மனநல மருத்துவம் முடித்தவர். தமிழ்நாடு- டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தில் 'மகளிர் மனநலம்' குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மருத்துவக் கல்லூரியின் மனநலப் பிரிவில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வருகிறார். 'மைண்ட் ஃபோகஸ்' என்ற நிறுவனத்தை உருவாக்கி, மன அழுத்தத்தைக் குறைப்பது பற்றி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காவல் துறையினருக்கு வகுப்புகள் நடத்தி வருகிறார். மேலும், 'உளநல சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்' என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராகவும் இருக்கிறார். மனிதகுல வரலாற்றைப் படிப்பதிலும், ஆராய்ச்சி செய்வதிலும் ஆர்வம் அதிகம். 'இவர் எழுதிய பிற நூல்கள்: 'Myths and Psychiatry'. 'ஆளை அசத்தும் 60 கலைகள்', 'அந்தரங்கம் இனிமையானது', 'அர்த்தமுள்ள அந்தரங்கம்', 'பெண்ணின் மறுபக்கம்'.

உங்கள் கருத்துக்களை பகிர :