உயிர்நூல்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category பொது நூல்கள்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatHardbound
Pages 80
Weight150 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉயிராகிய நுண் துகள், சிவத்தின் அங்கம் என உரைக் கப்பட்டது. சிவம் உச்ச நிலை இயக்கம் கொண்டது. அவ்வியக்கத்தினை சக்தி தணிக்கையில்தான் பொருட்கள் வெளிப்படுகின்றன. உயிரின் இயக்கம் ஆக்கையினுள் தணிந்து கொண்டே இருப்பதாகும். அவ்வாறு தணிகையில் சிவமாகிய உயிர்த் துகள் ஓரிடத்தில் நிலை பெற்றது போன்ற மயக்கக் காட்சி கிட்டும். மயக்கம் எனப்படுவதால், இது கற்பனை என்று பொருளல்ல.
அறிவு சோர்ந்து போதல் மயக்கம் ஆகும். அறிவினால் எட்டவியலாத நிலையில் உயிர் உள்ளது. உயிர் தனது நில்லாச் சுழல் இயக்கத்தினால் ஆக்கை முழுவதும் பரவுகிறது. இவ்வாறு பரவுகையில் ஆக்கையின் வளர்ச்சி மற்றும் வடிவமைப்பிற்கான ஏழு களங்களில் நிலவுகிறது. பரவுதல் வேறு, நிலவுதல் வேறு. பரவுதல் காட்சிக்கெட்டாதது. நிலவுதல் என்றால். ஏதோ ஒரு வகையில் காட்சிக்கெட்டுவது.
இவ்வாறு உயிர் கரணிய நிலை முதல் உணர் நிலை வரை ஐந்து நிலைகளில் நிலவுகிறது. உறை நிலை ஆகிய ஆறாம் நிலையில் அது உறைந்துள்ளது. அதாவது அங்கு அது மயக்கக் காட்சி அளிக்கிறது. அறிவு யாவும் ஒழிந்த நிலையில், புருவ மையத்தில் உயிரின் காட்சி உணர்த் தப்படுகிறது. நெற்றிக்கண் என முன்னோர் உரைத்ததும் சிவமாகிய உயிர்த் துகள் உறைதலையே என்க.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.செந்தமிழன் :

பொது நூல்கள் :

செம்மை வெளியீட்டகம் :