உயிருள்ள இயற்கை உணவுகள்

ஆசிரியர்: டாக்டர். ஏ.வி.ஜி.ரெட்டி

Category சமையல்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 256
5th EditionOct 2014
ISBN978-81-8446-2-06-9
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$7       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மூலிகை மற்றும் இயற்கை மருத்துவத் துறையில் நிபுணராக விளங்கும் டாக்டர் ஏ.வி. ஜி. ரெட்டி M.Sc., Ph.D., அவர்கள் முப்பது படுக்கைகள் கொண்ட இயற்கை மருத்துவமனையை நிறுவி சேவை செய்து வருகின்றார்.தமிழ் நாட்டு வைத்தியமான இந்த இயற்கை மருத்துவ முறையில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒப்பற்ற மருத்துவ குணங்கள் கொண்ட இலைகள், பூக்கள், காய்கள், கனிகள், வேர்கள், விதைகள், பட்டைகள் ஆகியவற்றை மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்துவதில் தன்னிரகற்று விளங்குகின்றார். இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் தன்னுடைய சாதனை முத்திரையைப் பொறித்து மிகச் சிறந்த மருத்துவர் என்னும் பெயரைப் பெற்றுள்ளவர் டாக்டர் ஏ.வி.ஜி.ரெட்டி அவர்கள்.- எம்.பி.எஸ்., எம்.டி., அலோபதி மருத்துவர்கள் கூட இயற்கை மூலிகை மருந்துகளையும், இயற்கை மருத்துவ குணங்களையும் கண்டு வியந்து, பல நோய்களை ஆங்கில மருத்துவ முறையில் குணப்படுத்துவது கடினமாக | இருக்கும்பொழுது இந்த சிகிச்சையப் பெற நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். இவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது புத்தகங்களைப் படிப்பது, ஆரோக்கியம் சம்பந்தமான பல்லாயிரக்கணக்கான புத்தகத்தை படிப்பதற்குச் சமம். இவருடைய ஒவ்வொரு புத்தகமும் அரிய பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது. இவரது புத்தங்களை படித்த பல் மாணவர்கள், இவரிடம் ஆலோசனை பெற்று, இன்று நாட்டின் பல பகுதிகளிலும் சிறந்த மருத்துவர்களாக செயல்பட்டு மக்களின் நோய்ப் பிணியை தீர்த்து வருகின்றார்கள்.கடந்த பல ஆண்டுகளாக வாரந்தோறும் சனிக்கிழமை காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை தன்வந்திரி யாகம் நடத்தி வருகின்றார். இந்த மூலிகை யாகத்தில் இலவசமாக எல்லோரும் கலந்து கொண்டு நோய்களிலிருந்து விடுதலை பெறலாம். மேலும் ஒவ்வொரு வாரமும் வெய்வாய், புதன், வெள்ளி, ஆகிய 5 நாட்களும் இலவசமாக மருத்துவ அறிவுரை வழங்கி வருகின்றார். உணவே மருந்து, மருந்தே உணவு என்னும் அரிய தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியர். நோயாளிகளுக்கு மருந்தாகப் பயன்படும் இவருடைய மருந்துகள் அனைத்தும் நோயில்லாதவர்களுக்கு ஒரு விருந்தாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :