உயிரியியல் புரட்சியின் ஒடுக்குமுறை
ஆசிரியர்:
மு. பாலசுப்பிரமணியன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?id=1435-1957-7238-7742
{1435-1957-7238-7742 [{புத்தகம்பற்றி விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான பி.டி., பருத்தி. அடுத்ததாக வரப்போகும் பி.டி. கத்தரி போன்ற மரபீனி மாற்றப் பயிர்கள் உருவாக்கும் ஆபத்து எப்படிப்பட்டது. இந்த மரபீனித் தொழில்நுட்பம் நம்மை என்ன செய்யும் என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம், உலகமயமாக்கலுக்கு மிகவும் பொருத்தமாக விளங்குகிறது மரபீனித் தொழில்நுட்பம். மூன்றாம் உலக சந்தைகளுக்கான திறவுகோலாக விளங்கும் உலக வர்த்தக நிறுவனத்தின் (W.T)) திட்டங்களில் இது முக்கியப்பங்கை வகிக்கிறது. நோய் அழிப்பு. பசிப்பிணி அகற்றல் ) போன்ற வாக்குறுதிகளைச் சுமந்துவரும் இத்தொழில்நுட்பம் மூன்றாம் உலக நாடுகளை மேற்கத்திய வடிவுரிமைச் சட்டங்களுக்கு சிறந்த வழி. இந்தக் காப்புரிமை பூதம், மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கக்கூடியது.
<br/>} {அணிந்துரை உணவு தானிய உற்பத்தியின் பெருக்கம் சமீபகாலத்தில் வெகு வாகக் குறைந்து விட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன. வேதி உரங்களின் அளவற்ற பயன்பாடு, மண் அரிப்பு, வளம் குன்றுதல், நிலத்தடி நீர் குறைதல் ஆகியவற்றில் பசுமைப் புரட்சியை நம்பி இனி தானிய உற்பத்தி யைப் பெருக்க முடியாது என்பது உணரப்படுகிறது. உணவுப் பற்றாக்குறை எனும் அபாயம் நம்முன் இப்போது தோன்றியிருக்கும் இவ்வேளையில் நம்மைக் காத்திடும் "புது தேவதைகளாக" உயிரி நுட்பவியலும், மரபியல் தொழில் நுட்பமும் வர்ணிக்கப்படுகின்றன. இவற்றின் ஆதரவாளர்கள்தான் முன்பு “பசுமைப்புரட்சியை" இந்நாட்டிற்குள் புகுத்தி, இந்நாட்டின் உயிர் பன்மயத்திற்கு ஊறு விளைவித்ததில் முக்கிய பங்காற்றிய வர்கள். இப்போது இவர்கள் பசுமைப் புரட்சியை மறந்து “மரபியல் புரட்சி” பற்றிப் பேசி வருகின்றனர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866