உயர்ந்தோரின் உன்னத பொன்மொழிகள்
ஆசிரியர்:
பேரா.இரத்தின நடராசன்
விலை ரூ.45
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1513-5543-5741-8821
{1513-5543-5741-8821 [{புத்தகம்பற்றி இன்றைய அரசன் நேற்று அழுத குழந்தை. இன்றைய மகோன்னதமான கட்டிடம் நேற்றைய வரைபடம். நேற்றைய நிகழ்வுகளின் விளைவுதான் இன்றைய நிகழ்காலம். இன்றைய நிகழ்வுகள்தான் நாளைய வாழ்விற்கு சிறந்த வித்து.உங்களைப் பக்குவப்படுத்திட உதவும், உங்களைப் பட்டைத் தீட்டிடவும் உதவும். அலைந்து திரியும் மனதிற்கு அணைபோடும். மலை அடிவாரத்தில் உள்ளவரை மலை உச்சிக்குக் கொன்டு போகும் இந்தப் பொன்மொழிகள், ஆழ்கடலில் அமிழ்ந்து கண்டெடுத்த நல்முத்துக்கள், உங்கள் வாழ்க்கை ஆபரணத்தில் பதியுங்கள், நீங்கள் ஒளிவிட்டு பிரகாசிப்பீர்கள்.} {பதிப்புரை நாள் தோறும் பல புத்தகங்களைப் படிக்கி றோம். செய்திகளைப் படிக்கிறோம். சிலவற்றை நம்மால் மறக்கவியலாது. திரைப்படங்களைப் பார்க்கிறோம். சில சலனங்களை நாம் மறப்பதில்லை. பலரோடு பழகுகிறோம். அவர்கள் கூறுகின்ற சில வார்த்தைகளை நம்மால் மறக்க முடியாது.இத்தகைய சொற்கள், வார்த்தைகள், மொழிகள் நம்மை நாள்தோறும் உயர்த்திக் கொள்வதற்கு உதவுகின்றன. எனது வாழ்வில் கண்ட உண்மையும் கூட. பலரது பொன்மொழிகள் எனது வாழ்வை, பணியை மிகவும்சிறப்பாகச் செய்வதற்கு பெரிதும் உதவியுள்ளன, உதவு கின்றன, உதவும். 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற் கிணங்க மற்றவர்கட்கும் அவைகள் பயன் பட வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் வெளியிடப் படுகின்றது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866