உப்புக்காற்றில் உயிரானவளே..!

ஆசிரியர்: ரம்யா ராஜன்

Category குடும்ப நாவல்கள்
Publication மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன்
FormatPaper Pack
Pages 256
Weight200 grams
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா என் கட்டுமரம் இன்னைக்குக் கரை எட்டுமா அவ உச்சி பாற ஓரமா... ஓரமா... ஓரமா... நான் தண்ணிக்குள்ளே தூரமா... தூரமா... தூரமா நான் ரெண்டு கண்ணில் உப்புக் காச்சி உள்ளங்க்கையில் கஞ்சி காச்சி வச்சிருக்கேன் ரொம்ப நேரமா... நீயும் வந்து சேரும் யோகம் வருமா கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா...”
தலைக்கு மேல் இருந்த கைபேசியில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, எந்த வித சலனமும் இல்லாமல், ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான். அவன் அப்படியே இருந்தாலும், மழை விடுவதாக இல்லை . சிறு தூரல்களின் சிதறலில் கூட எழும்ப மனமில்லாமல் கிடந்தவன்,
"மழை வந்திடுச்சு அருளண்ணே ...'' எனக் குரல் கொடுத்தபடி வெளியே வந்த பாண்டியின் குரல் கேட்டு, இனியும் படுத்திருக்க முடியாது என எழுந்து நின்றான்.
ஆறு அடியில் சமுத்திரத்தின் நடுவில் கிரேக்க சிலை போல நின்றான். பின்னே அவர்கள் இருப்பது நடுக்கடலில் அல்லவா. அவர்களின் விசைப்படகு ஒரே சீராகச் சென்று கொண்டிருக்க, மழை வலுக்க ஆரம்பித்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரம்யா ராஜன் :

குடும்ப நாவல்கள் :

மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன் :