உன் மீதமர்ந்த பறவை

ஆசிரியர்: பழனிபாரதி

Category கவிதைகள்
Publication குமரன் பதிப்பகம்
FormatPaperPack
Pages 80
First EditionApr 2014
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$2.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

செவ்விலக்கியத்தின் கூறு ஒரு மரம் கிளை பரப்புவது போல கிளை கிளையாக விரிவது. மரம் மரமாகத் தாவிச் செல்வது. வேறு உலக இலக்கிய தரிசனங்கள் வந்து வந்து போகும், புதுப்புதுக் கதவுகள் திறந்தபடியே, இருக்கும். சில கவிதைகளைப் படிக்கும்போது வேறு எங்கோ ஒரு கவிதை வரியை நினைவு மீட்கும். ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இந்தக் கவிதைத் தொகுப்பைப் படித்தபோது அந்த அனுபவம் பல தடவை எனக்கு ஏற்பட்டது.உலகம் முழுவதும் கவிஞர்களின் அகம் ஒன்றுதான். அவர்கள் சிந்தனைக் கோடுகள் எல்லாம் எங்கோ ஒரு புள்ளியில் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றன.கவிதைக்கு அழகு சேர்ப்பவை உவமைகள். சங்க இலக்கியத்தில் காணப்படும் உவமைகள் எனக்கு பிரமிப்பூட்டுபவை, பழநிபாரதியின் உவமைகளும் அப்படியே.

உங்கள் கருத்துக்களை பகிர :