உன் இம்மையை நினைத்து ஏங்குகிறேன் !

ஆசிரியர்: டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

Category
Publication தலித் முரசு
Formatpaper back
Pages 16
Weight50 grams
₹25.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மனந்திறந்து சொல்கிறேன் ரமா, நான் ஒன்றும் இரக்கமற்றவன் அல்ல. அறிவு மீது நான் கொண்ட தீராத வேட்கையின் காரணமாக அந்தப் பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பயணத்தில் ஏதேனும் தடை ஏற்படும் பொழுது அது என்னை வருத்துகிறது; என் அமைதியைக் குலைத்து கோபம் கொள்ளச் செய்கிறது. எனக்கும் இதயம் இருக்கிறது ரமா. நானும் சில நேரங்களில் தடுமாறத்தான் செய்கிறேன். ஆனால் என்னை ஒரு மாபெரும் புரட்சிக்கு ஒப்புக்கொடுத்து இருப்பதால் என் உணர்வுகள் அனைத்தையும் நானே பொசுக்கிக் கொள்கிறேன். அதனால் நீயும் யஷ்வந்த்தும் தான் பல நேரங்களில் பாதிக்கப்படுகிறர்கள் என்பதுதான் உண்மை, அதனை உணர்ந்த காரணத்தால்தான் இன்று வழியும் கண்ணீரை ஒரு கையால் துடைத்துக் கொண்டே மற்றொரு கையால் இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்!


உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் :

தலித் முரசு :