உனக்கு நான் எனக்கு நீ

ஆசிரியர்: லக்ஷ்மி

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper back
Pages 152
First EditionDec 1984
0th EditionJan 2018
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மாலை ஐந்து மணிக்கு அவளுக்கு வேலையிலிருந்து விடுதலை. ஆனால் நான்கு மணியிலிருந்து ஐந்து மணி அவகாசத்திற்குள் இரவு நேர ரிஸப்ஷனிஸ்ட் வந்து வேலையை ஒப்புக்கொள்ளுமுன் மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போன்றதொரு எரிச்சலில் அவள் தவித்துப் போனாள்.
ஓயாது அடித்த டெலிபோனுக்குப் பதிலளித்து மேஜைக்கு முன் பரபரப்போடு நிற்கும் பார்வையாளர்களுக்கு நோயாளிகளின் விவரம் தந்து, டாக்டர் அறையிலிருந்து கூச்சலிட்ட இன்டர்காமிற்குப் பதில் சொல்லிவிட்டு... ஐந்து மணியளவில் சந்திராவிடம் வேலைகளை ஒப்படைத்து விட்டு ஓடிச்சென்று முகத்தைக் கழுவி முடியைச் சரிப்படுத்திக்கொண்டு தோல்பையுடன் முன் பக்கத்து கேட்டை தாண்டி வெளியே வந்து நின்றபோது...
வேகமாக மேலும் கீழும் சென்ற போக்குவரத்து எழுப்பிய ஓசையில் கூட அப்பாடா என்றதொரு நிம்மதி.
அவளை அப்படிப் பாடுபட்டு வேலை செய்யச் சொல்லி அம்மா நிர்ப்பந்திக்கவில்லை.
பி.ஏ. பட்டத்திற்குப் பின் ஷார்ட் ஹாண்ட், டைப்பிங் பாஸ் செய்த பின்பு வீட்டிலே உட்கார்ந்திருக்கப் பிடிக்காது

உங்கள் கருத்துக்களை பகிர :
லக்ஷ்மி :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :