உனக்கு எது வேண்டும் ?

ஆசிரியர்: சத்குரு

Category ஆன்மிகம்
Publication ஈஷா அறக்கட்டளை
FormatPaper Back
Pages 143
Weight200 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉனக்கு
எது வேண்டும்?

மதங்களும் முந்தின தலைமுறையினரும் சொன்னதையே தன் போதனைகளாகத் திருப்பிச் சொல்லாமல், எதையும் நேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர். ஒவ்வொரு தனி மனிதனும் எல்லையில்லா ஆனந்த நிலையை அனுபவித்து உணர, கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 'ஈஷா யோக மையத்தை நிறுவியவர். உலகெங்கும் பல இலட்சம் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சத்குருவாக முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
இந்த நூலில்....
சத்குரு ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளும் விதமும் சரியான தீர்வை சொல்லும் ஆற்றலும் அனைவரையும் எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயம், உணவு, விளையாட்டு, யோகம், தலைமை, உடல்நலம், சுற்றுச்சூழல், விவசாயம், தேர்தல், தீவிரவாதம், ஆன்மீகம் என்று சத்குரு பல தலைப்புகளில் பேசி, பத்திரிக்கைகளில் வெளிவந்து பலராலும் பாராட்டப்பட்டவை, அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த நூலில் தொகுத்தளிக்கப் பட்டிருக்கின்றன. நீங்கள் வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும், ‘உங்களுக்கு எது வேண்டும், எந்த விஷயத்தில் நீங்கள் தெளிவு பெற விரும்புகிறீர்கள்' என்று கேட்பது போல், இந்த நூலில் பல விஷயங்கள் உங்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
சத்குரு :

ஆன்மிகம் :

ஈஷா அறக்கட்டளை :