உதயணன் கதை சூளாமணி - கதை

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category கதைகள்
FormatPaperback
Pages 112
Weight150 grams
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அமிழ்தினும் இனிய தமிழ்க் காப்பியங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் எளிதில் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுந்ததே இந்தக் ‘காப்பியக் கதை மலர்கள்' என்னும் நூல்.
இந்நூலில் ‘சூளாமணி' என்னும் காப்பியமும் 'உதயணன் கதை' என்னும் பெயரில் பெருங்கதை என்னும் காப்பியமும் இடம் பெற்றுள்ளன. இவை ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு காப்பியக் கதை மலர்கள் - சூளாமணி, காப்பியக் கதை மலர்கள் - உதயணன் கதை' என தனித்தனி நூல்களாக வெளிவந்துள்ளன. இப்பொழுது இரண்டும் சேர்ந்து ஒரே தொகுதியாக எமது பதிப்பகத்தின் மூலம் காப்பியக் கதைமலர்கள் - உதயணன் கதை, சூளாமணி என வெளி வந்துள்ளது.
செறிவான நடையில் அமைந்து எளிதில் மக்களைச் சென்றடையாமல் இருக்கும் இக்காப்பியங்கள் கதை வடிவில் எளிதில் மக்களைச் சென்றடையும் நோக்கத்தில் இந்நூல் அமைந்துள்ளது. பண்பாட்டுத் தளத்தில் பெயர்கள் புதியன போல அமைந்திருந்தாலும் கதை அம்சத்தில் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருப்பது மிகவும் கவனிக்கத் தக்கது.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

கதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :