உணவின் வரலாறு

ஆசிரியர்: பா ராகவன்

Category சமூகம்
Publication மதி நிலையம்
FormatPaperback
Pages 256
First EditionSep 2012
2nd EditionDec 2014
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$7.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

உணவின் கதையை வாசிக்கத் தொடங்கும்போது, அது மனித குலத்தின் வரலாறாகவே நீண்டுவிடுவது தற்செயலானது அல்ல. நெருப்பு கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலம் தொடங்கி இன்று வரையிலான உணவின் பரிமாண வளர்ச்சி என்பது மனிதர்களின் பரிணாம வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த விஷயம். பசியை அடக்க உணவு என்பது மாறி, ஒரு கட்டத்தில் நாவின் ருசியை அடக்க விதவிதமான பண்டங்களை மனிதன் கண்டுபிடிக்கவும் உருவாக்கவும் ஆரம்பித்தபோது, முற்றிலும் புதிய, வண்ணமயமான ஓர் உலகம் உருப்பெற்று எழுந்தது. இந்தக் கணம் வரை உலகில் புழங்கும் அத்தனை விதமான உணவு வகைகளும் ருசிக்கான தேடலின் விளைவே. தேன், பட்டாணி, அரிசி, கிழங்கு முதல் ஹாம்பர்கர், குரங்கு சூப் வரை இந்நூல் தொட்டுக்காட்டி விவரிக்கும் நூற்றுக்கணக்கான உணவு வகைகள், உலகெங்கும் வாழும் பலவிதமான மனிதக் குழுவினரின் ருசி வித்தியாசங்களை காலம் தோறும் மாறும் ரசனையைச் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு ருசிகரமான வாசிப்பு அனுபவத்துக்குத் தயாராகுங்கள்!

உங்கள் கருத்துக்களை பகிர :