உடையார் தொகுதி 5

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHardbound
Pages 368
Weight600 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866என் வீட்டின் அருகில் உள்ள ஓர் நூலகத்தில் 'உடையார்' புத்தகத்தின் முதல் பாகத்தைப் பார்க்க நேர்ந்தது. முன்னுரையைப் படித்தேன்.
தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் தீராத காதல் உண்டு.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் உங்களுடைய படைப்புக்களிலும், சரித்திர நாவல்களிலும் நான் முதன்முதலில் படித்தது 'உடையார்'தான்.
உடையாரை நான் பார்த்து, படித்து, ரசித்து, சுவைத்து, லயித்து, வியந்து என்னையும் மறந்தேன்.
உடையாரின் மூன்று பாகங்களையும் நான் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஏதோ சோழ நாட்டிற்கும், அதில் வரும் ஒவ்வொரு பாத்திரங் களுக்கும் எனக்கும் ஒருவித முன் ஜென்மத் தொடர்பு இருப்பதைப் போல உணர்ந்தேன்.
தங்களின் இந்த அரிய சாதனையை எங்களைப் போன்ற இளைஞர்கள், பொறியாளர்கள் படிக்கும் போது, தமிழ்க் கலாச்சாரத்தின் மீதும், தமிழின் மீதும், நம் மண்ணின் மாபெரும் அரசர்கள் மீதும், நம் கலைக் கோயில்கள் மீதும், தமிழினத்தின் மீதும் ஒருவித எல்லையில்லா அன்பு ஏற்படுகிறது. தமிழராய் பிறந்ததில் ஒரு கர்வம் ஏற்படுகிறது.
உடையாருடைய ஐந்தாம் மற்றும் ஆறாம் பாகங்களைப் படிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன்.
- பத்மாவதி,
வேலூர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :