உடலின் மொழி

ஆசிரியர்: அ.உமர்பாரூக்

Category உடல்நலம், மருத்துவம்
FormatPaperback
Pages 96
ISBN978-93-87333-00-0
Weight150 grams
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் அ. உமர் பாரூக் எழுதிய “உடலின் மொழி.” கவர்ந்த புத்தகம் என்று சொல்வதைவிட முழுமையாக என்னை ஆக்கிரமித்த அல்லது அன்றாடம் அதிலிருந்து ஒரு வரியையேனும் நினைத்தே ஆகும்படி பாதித்த புத்தகம் என்று சொல்வதுதான் சரி.
இலக்கியத்தில் ஆண் மொழி, பெண் மொழி, தலித் உரையாடல் எல்லாம் நாம் அறிவோம். உடல் மொழி பற்றியும் உடல் அரசியல் பற்றியும்கூட இப்போது பரவலாகப் பேசப்படுகிறது. இவர் சொல்லவருவது இதுவெல்லாம் அல்ல. ஒவ்வொரு மனுஷியுடைய மனிதனுடைய உடலும் அவளோடு அவனோடு பேசிக்கொண்டிருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் அழுத்தமாகவும் ஆவேசமாகவும்கூடப் பேசுகிறது. ஆனால் நம் தேவைகளுக்காக கணினியின் மொழியை, பறவைகளின் மொழியை, மிருகங்களின் மொழியைக்கூடப் போராடிக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்போது நாம், நம் ஆரோக்கியம் குறித்து நம்மிடம் பேசும் உடலின் மொழியை அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம், தூசியை உள்ளே அனுப்ப மறுக்கும் உடலின் எதிர்ப்புக்குரலே தும்மல். திரிந்த பாலை வாந்தியாகவும் பேதியாகவும் வெளியேற்றுவது குழந்தையின் உடலின் மொழி என்று துவங்கும் இப்புத்தகம், விஞ்ஞானம் நமக்கு இதுகாறும் கற்றுத்தந்துள்ள பல பாடங்களைத் தலைகீழாகப்போட்டு உடைக்கிறது.
மிகவும் அடிப்படையாக நாம் சாப்பிடும் முறை பற்றிய மிகப்பெரிய புரிதலை இந்நூல் நமக்கு வழங்குகிறது. எல்லா உடல் உபாதைகளுக்கும் நோய்களுக்கும் மூலகாரணமாக இருப்பது நமது முறையற்ற உணவுப்பழக்கமே, உணவு முறையே என்று ஆணித்தரமாக நம் மனதில் நிறுவுகிறது. அதை ஆசிரியர் சொல்லியுள்ளவிதம், அவர் அதைப் பேசப் பயன்படுத்தும் மொழி, மிகச்சரியாக சொல்லவரும் உள்ளடக்கத்திற்குப் பொருந்துகிறது.


நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல் நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்? இப்படி சதா சர்வகாலமும் உங்கள் நலனில் அக்கறை கொண்டு வரப்போகிற உடல் ரீதியான ஆபத்துகளை முன்பே அறிவித்து எச்சரிக்கை செய்யும் ஒரு நபர் உங்களுடன் இருந்தால்உடலின் மொழியை நாம் அறிவதன் முலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். நோய்களும் மருந்துகளுமற்ற வாழ்க்கையே வளமானதாகும். வாருங்கள்உலக மொழிகளை விட உயர்ந்த உடலின் மொழி கற்போம்!

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.உமர்பாரூக் :

உடல்நலம், மருத்துவம் :

எதிர் வெளியீடு :