உடம்பு சரியில்லையா?
ஆசிரியர்:
ஜி எஸ் எஸ்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F?id=1507-8860-7809-8979
{1507-8860-7809-8979 [{புத்தகம் பற்றி உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வது அவசியம்தான். உள்ளூர் நடப்புகளைத் தெரிந்து கொள்வதும் நல்லதுதான். ஆனால் இவற்றைவிட மிக முக்கியமானது நம் ‘உடலூர்’ பிரச்னைகளை அறிந்து கொள்வது. உடலுக்கு நேரக்கூடிய பலவித பாதிப்புகளையும், நோய்களையும் எளிய முறையில் இந்த நூல் உங்களுக்கு உணர்த்துகிறது. என்ன பிரச்னைக்கு எந்த மருந்து சாப்பிட வேண்டும் என்பதை ஒரு டாக்டர் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் அந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களைக் கூறுவதுடன், அவற்றைத் தடுக்கவும், தவிர்க்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த நூலில் அறியலாம். மிக முன்னேறிய தொழில்நுட்பக் கருவிகள் மருத்துவ உலகில் அறிமுகமாகி வருகின்றன. சந்தோஷம். என்றாலும் உடல் பாதிப்புகளை கண்டறிவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவற்றைத் தீர்ப்பதிலும் ஏற்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் என் மனதில் உள்ளது. ஆயுளை அதிகரிக்க முடிகிறது. ஆனால் அப்படி ஆயுளை அதிகரித்துக் கொள்ளும்போது உயிர்ப்புடன் வாழ முடிகிறதா? இந்தச் சூழலில் நம்மை நாமே அறிந்து கொள்வதும் முடிந்தவரை எச்சரிக்கையாக இருப்பதும் மிக அவசியம். அதற்கு உதவும் ஒரு பாதையே இந்த நூல்..}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866