உங்கள் வாழ்க்கை மத்தளமா மயிலிறகா

ஆசிரியர்: சிபி கே.சாலமன்

Category சுயமுன்னேற்றம்
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 135
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பளு தூக்கும் சாம்பியனால்கூடத் தூக்கமுடியாத அளவுக்கு வேலைப்பளு. ஒன்றை கடித்தால் இன்னொரு டெட்லைன். கொஞ்சம் அசந்தால் உங்களை நெட்டித்தள்ளி உங்கள் இடத்தைப் பிடிக்க ஆயிரம் பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நிவாகத்தைச் சுருட்டி மடக்கி பாக்கெட்டில் போட்டுக்கொள்ளும் திறன், மேலதிகாரியின் பிரியம், எல்லோரிடம் நல்ல பெயர்& இத்தனையும் வாய்த்தால்தான் பிரமோஷன், சம்பள உயர்வு, இன்னபிற வசதிகள். நடந்தால் போதாது. மூச்சிரைக்க ஓடவேண்டும். ஒரு நமிடம் ஓடுவதை நிறுத்திவிட்டு யோசியுங்கள். உங்கள் குழந்தையின் பிறந்ததேதி என்ன? உங்கள் மனைவியைக் கடைசியாக எந்தப் படத்துக்கு அழைத்துச் சென்றீர்கள்? சமீபத்தில், குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா எப்போது, எங்கே போனீர்கள்? திருமண நாளுக்கு உங்கள் மனைவிக்கு என்ன பரிசு வாங்கித் தந்தீர்கள்? பிரச்னை இங்கேதான் ஆரம்பிக்கிறது. அலுவலகத்தைப் போலவே வீடும் ஒரு கமிட்மெண்ட். ஆபீஸில் வீட்டைப் பற்றி நினைக்கக்கூடாது. வீட்டுக்கு ஆபீஸை இழுத்துவரக்கூடாது. இரண்டையும் பேலன்ஸ் செய்தாகவேண்டும். அங்கேயும் நில்ல பெயர். இங்கேயும் நல்ல பெயர். முடியுமா? பணியிடம் ,வீடு,இரண்டையும் பேலன்ஸ் செய்து இரண்டு இடங்களிலும் ஜொலிக்கும் வித்தையைக் கற்றுத்தரும் மந்திர நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிபி கே.சாலமன் :

சுயமுன்னேற்றம் :

கிழக்கு பதிப்பகம் :