உங்கள் பாக்யராஜின் பதில்கள் 4

ஆசிரியர்: கே.பாக்யராஜ்

Category நேர்காணல்கள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaper back
Pages 216
Weight200 grams
₹90.00 ₹84.60    You Save ₹5
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவழிபாட்டுக்கு என்று சில வழிமுறைகள் உண்டு. அதிலிருந்து மாறுபட்டு வழிபாடு செய்தால் தெய்வம் கருணை காட்டாது என்று சில பெரியவர்கள் கூறுவது பற்றி? ஒரு வியாபாரி வியாபாரத்துல ரொம்ப நஷ்டம் வந்து நொடிச்சுப் போய் சிரமப்பட்டப்போ, 'கடவுளே! என்னை எப்படியாவது காப்பாத்தேன். உன்னை வழிபடற முறைகூட எனக்குத் தெரியலையே'ன்னு புலம்பினாரு. அந்த வழியா வந்த ஆதிசங்கரர், அம்பிகை பேர்ல ஒரு மந்திரத்தை அந்த வியாபாரிக்கு சொல்லிக்கொடுத்து, இதை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லு. அம்பிகை கருணை காட்டுவாள் னு சொல்லிட்டுப் போனாரு. ஆனா அந்த வியாபாரிக்கு அந்த மந்திரம் வாய்லயே நுழையல. அதன் முதல் வரியான 'பவானி'ங்கறதை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்ல, பவானி அம்மன் கரு ணை காட்டி, அவர் நல்ல நிலைக்கு வந்தார். அதுனால உண்மையான வழிபாடுங்கிறது மந்திர தந்திரங்கள்லயோ, பகட்டான அபிஷேக ஆராதனையிலோ இல்லை. மனம் நெகிழ்ந்து ஆத்மார்த்தமா இறைவனைப் பத்தி நினைச்சு உருகறதுலதான் இருக்கு.

உங்கள் கருத்துக்களை பகிர :
கே.பாக்யராஜ் :

நேர்காணல்கள் :

கண்ணதாசன் பதிப்பகம் :