உங்கள் உடல் பேசுகிறேன்

ஆசிரியர்: கீதா

Category உடல்நலம், மருத்துவம்
Publication புதிய தலைமுறை
FormatPaperback
Pages 104
First EditionDec 2010
6th EditionOct 2014
ISBN978-81-927865-6-8
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$3.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

திருவரங்கத்திலோ திருப்பதியிலோ ஒரு புல்லாக, மீனாகப் பிறக்க வேண்டும், 'எம் பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனோ?' எனக் கடவுளிடம் குலசேகர ஆழ்வார் உருகி வேண்டியதாகச் சொல்வார்கள், எனக்கு மறு பிறவி என்று ஒரு வாய்ப்பு கிடைக்குமானால் ஒரு சிவப்பணு வாகப் பிறந்து உடம்பின் எல்லாப் பகுதிக்கும் பயணித்து அவை இயங்குவதை அருகிருந்து பார்க்கவே விரும்புவேன்,
மனித உடலின் இந்த ஆச்சரியங்களை நாம் அறிந்து கொள்ள, அறிந்து கொள்ள நம்மிடத்தில் இரண்டு மாற்றங்கள் நேரும். ஒன்று படைப்பின் அல்லது கடவுளின் அளப்பரிய ஆற்றல். அந்தச் சக்திக்கு முன் நாம் ஒன்றுமே இல்லை என்ற பணிவு நம் உள்ளே வந்து அமர்ந்து கொள்ளும், இரண்டாவது மாற்றம் உடல் என்ற இந்தப் பரிசு, நமக்குக் கிடைத்திருக்கும் எத்தனை மகத்தானதோர் கொடை என்ற எண்ணம் தோன்றும். நம்மை அறியாமலேயே நம் உடல் மீது ஒரு மரியாதை ஏற்படும்.
உடல் பற்றிய இந்த நுட்பங்களை ஒரு வாசிப்பில் குழந்தையும் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய எளிய சரளமான நடையில் கீதா 'புதிய தலைமுறை' இதழில் வாரந்தோறும் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் வெளியானபோது வாசகர்களிடம் இருந்து, குறிப்பாகப் பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து, வாராவாரம், பாராட்டுக்கள் வந்து கொண்டிருந்தன. அதைவிட ஆச்சரியம் சில புகழ்பெற்ற மருத்துவர்கள் இந்தத் தொடரை மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பாராட்டினார்கள்.
இப்போது அந்தக் கட்டுரைகள் நூலாக வடிவம் பெற்று, வெளிவருகிறது. உங்கள் குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மையையும் இறை ஆற்றலின் மீது நம்பிக்கையையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்த வேண்டுமானால் இந்த நூலை அவர்களுக்குப் பரிசளியுங்கள், அப்படிச் செய்வதன் மூலம் ஒரு புதிய தலைமுறை வளர்ந்தோங்குவதற்கு நீங்கள் வழிகாட்டுகிறீர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :