உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்

ஆசிரியர்: ஆக் மான்டினோ(தமிழாக்கம் :தேவவிரதன் )

Category சுயமுன்னேற்றம்
Publication ஜெய்கோ
FormatPaperback
Pages 107
ISBN978-81-8495-533-0
Weight150 grams
₹135.00 ₹121.50    You Save ₹13
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒவ்வொரு காலத்திலும் அந்தக் காலத்திற்கேற்றதோர் சக்தி வாய்ந்த இலக்கியம் உருவாக்கப்படுகின்றது. இந்த எழுத்துக்கள் நிஜமாகவே படிப்பவரின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சக்தி வாய்ந்தவை. 'உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்' அந்த வகையில் பலரின் வாழ்க்கையின் பாதையை மாற்றியமைக்கக் கூடியது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹபீத் என்ற ஏழை ஒட்டகம் மேய்க்கும் சிறுவனின் அணைக்க முடியாத தாகம் அவன் வாழ்க்கையின் தரத்தை மாற்றி மிக உயரத்திற்கு ஏற்றிச் சென்ற கதை இது. பாத்ரோஸ் என்ற மிகப் பெரிய வணிகன், ஒரே ஒரு அங்கியை ஹபீதிடம் கொடுத்து, அதை அவன் திறமையை உபயோகித்து பெத்லஹெமுக்குச் சென்று விற்று வரச் சொல்கிறார். ஆனால், போகும் பாதையில் ஹபீதின் மனிதாபிமானம் அந்த அங்கியை குளிரில் நடுங்கும் ஓர் ஏழைக் குழந்தையைக் காப்பாற்றத்தான் பயன்படுகிறது. சோர்ந்த மனதுடன் திரும்புகிறான் ஹபீத். என்ன ஆச்சரியம்! பாத்ரோஸ், தோல்வியில் துவண்டு திரும்புகின்ற ஹபீதின் தலையைச் சுற்றி மிளிரும் ஒளிவட்டத்தைக் கண்டு அதைக் கடவுள் அவனுக்கு அளித்த ஆசியாகக் காண்கிறார். அவர் ஹபீதுக்கு மதி நுட்பம் தரக்கூடிய பழம்பெரும் பத்து அறிவுரைகளை அவன் வாழ்க்கையின் லட்சியங்களை எட்டும் வழிகளாக வழங்குகிறார். எக்காலத்திற்கும் பொருந்தும் இக்கதை அந்த அறிவுரைகளை விளக்குகிறது. ஹபீத் அந்த மூதுரைகளின் ரகசியங்களைப் புரிந்து செயல்படுத்தி, உலகின் மிகப் பெரிய மற்றும் சிறந்த வணிகன் ஆகிறான். அவன் வாழ்க்கையை மேம்படுத்த உதவிய அந்தப் பொன்மொழிகள் உங்களுக்குக் கூட உபயோகப்படலாம்... உதவலாம்... ஏனென்றால், நாம் ஒவ்வொருவரும் ஒரு வகையான வணிகர்களே... ஆமாம்... நம் வாழ்க்கையின் வெற்றிகள் நாம் நம்மையும், நம் திறமைகளையும் எப்படி விலை பேசுகிறோம் என்பதைப் பொருத்ததல்லவா?
ஆசிரியரைப் பற்றி ஆக் மான்டினோ 'சக்செஸ் அன்லிமிடெட்' என்ற ஷிகாகோவில் இருந்த பத்திரிகையின் தலைமையை விட்டு தனது 52 வது வயதில் 1976ல் ஆக்கபூர்வமான மனநிலையுடன் விலகினார். அதன் பின் அவர் தன் முழு நேரத்தையும் எழுதுவதற்கும், உரைகள் நிகழ்துவதற்குமே அர்ப்பணித்துக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுயமுன்னேற்றம் :

ஜெய்கோ :