ஈரோடு மாவட்ட வரலாறு

ஆசிரியர்: சக்திதாசன் சுப்பிரமணியன்

Category வரலாறு
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 264
First EditionApr 2018
ISBN978-81-9373-639-7
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
கல்வெட்டறிஞர் புலவர் செ.இராசு எம்.ஏ., பி.எச்.டி. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசில் 02.01.1938 அன்று பிறந்தவர். பெற்றோர் சென்னியப்பகவுண்டர் நல்லம்மாள் ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் 1955 ஆம் ஆண்டு பள்ளியிறுதிக் கல்வியை முடித்து திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் பட்டம் பெற்றார். தான் பயின்ற ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார் (1959 - 1963) பண்டைய எழுத்துக்களைப் படித்துக் கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி. ஆய்வு அனுபவத்தால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத் தொல்லியல் துறையில் பணியில் சேர்ந்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் வெளியீடான தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் தொகுதியை வெளியிட்டார் (1983). இந்நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது. பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் (1982 - 1998) ஓய்வு பெற்றபின் ஈரோட்டில் தங்கி ஐம்பதாண்டு கால (1959- 2009) ஆய்வுகளை நூல்களாக வெளியிட்டு வருகிறார். சேதுபதிகள், தொண்டைமான்கள், மராட்டியர், இசுலாமியர், வேட்டுவர், வேளாளர், பாளையக்காரர்கள், பிற சமூக வரலாற்று ஆவணங்களை வெளியிட்டுள்ளார், நொய்யல்கரைக் கொடுமணல் நாகரிகத்தை வெளிப்படுத்தியதுடன் காலிங்கராயன், சின்னமலை வரலாறுகளையும் ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். '

உங்கள் கருத்துக்களை பகிர :
சக்திதாசன் சுப்பிரமணியன் :

வரலாறு :

விஜயா பதிப்பகம் :