இழையறாத பெருவாழ்வு

ஆசிரியர்: சா.கந்தசாமி

Category சிறுகதைகள்
Publication சந்தியா பதிப்பகம்
FormatPaper back
Pages 96
ISBN978-93-87499-60-7
Weight150 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
குறுநாவல் என்றால் சிறிய நாவல் என்று சொல்லி விடலாம். ஆனால் மனிதர்கள் வாழ்க்கையைப் பற்றி சிறுகதை, குறுநாவல், நாவல் என்று எதிலும் எழுதி அடக்கிவிட முடியாது. எழுத எழுத இன்னும் எழுத வாழ்க்கை இருக்கிறது என்பதை எழுதப்பட்டதைப் படிக்கையில் தெரிகிறது.
பக்கங்களின் எண்ணிக்கை அல்ல படைப்பு. எத்தனைப் பக்கங்கள் எழுதினாலும் இன்னும் இடம் இருக்கிறது என்பதுதான் படைப்பு என்பதின் விதி. சொல்ல முடியாத மனித வாழ்க்கையைச் சொல்லிப் பார்க்கவே பலரும் எழுதுகிறார்கள். சிலருக்கு ஒரு பத்துப் பக்கம் போதுமானதாக இருக்கிறது. பலருக்கு ஆயிரம் பக்கங்கள், இரண்டாயிரம் பக்கங்கள் தேவையாக இருக்கிறது. படைப்பு இலக்கியம் என்பது பக்கங்களின் அளவில் இல்லை கொண்ட நாவல் மகத்தான நாவல் என்றோ இருநூறு பக்கங்கள் ஐயாயிரம் பக்கங்கள் கொண்ட நாவல் சாதாரணமான நாவல் என்றோ சொல்லிவிட முடியாது.ஒரு படைப்பு எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பது தான் படைப்பின் ஆளுமையைக் கொண்டு இருக்கிறது. படைப்பின் வலிமையென்பது மொழி அலங்காரத்தில் இல்லை; கருத்து வளத்தில் கிடையாது. சித்தாந்தங்களோ, இலட்சியங்களை ஒரு படைப்பின் ஆதார சுருதியாக மாறுவது இல்லை.வாழ்க்கையின் வனப்பை மெருகு குலையாகமல் எவ்வளவு தூரம் சொல்ல முடிகிறதோ - அந்த அளவுக்குத்தான் வருக படைப்பு உயிர்ப்புடன் இருக்கிறது. 1
.

உங்கள் கருத்துக்களை பகிர :
சா.கந்தசாமி :

சிறுகதைகள் :

சந்தியா பதிப்பகம் :