இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்

ஆசிரியர்: பா.ஆனந்தகுமார்

Category இலக்கியம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 92
First EditionJul 2004
4th EditionJun 2010
ISBN978-81-2340-837-8
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழிலக்கியக் கல்வியில் தீவிர ஈடுபாடும் ஆழ்ந்த பயிற்சியும் விமர்சன ரீதியான பார்வையும் கொண்ட முனைவர் பா. ஆனந்தகுமாரின் இந்நூல், அவருடைய பின்முகப்பட்ட பார்வைக்கும் அறிவுக்கும் எதையும் தெளிவாக விளக்கும் திறனுக்கும் அடையாளமாக விளங்குகிறது. இலக்கியத்தை ரசிப்பது, விளக்குவது. ஆராய்வது என்றுள்ள பொதுவான மூன்று நிலைகளில், இந்நூலாசிரியர்க்குரிய ஈடுபாடு 'ஆராய்வது' என்பதாகும், சில கருதுகோள்களையும் முன் வரைவுகளையும் தளமாகக் கொண்டு காரண காரியங்களோடும் சரியான முறையியலோடும் தேடிக்கண்டறிந்து சொல்லுகிற ஆராய்ச்சியில், புதிய செய்தியும் புதிய கோணமும் இருக்கும். ஆய்வுப்பொருள் பற்றிய ஒரு விசாலமான தளத்தை வாசிப்போர்க்குக் காட்டும். வாசிப்போருடைய அறிதிறனும் பார்வைகளின் எல்லையும் விரிவடையும்; பெருகும். இந்த நூல் விரிவான களத்தில் அமைந்திருக்கிறது. சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை விரிவான காலப்பகுதியில் தேடுதல் நிகழ்த்துகிறது. அதுபோல, கவிஞர்களைப் பற்றிக் கூறுகிறது; ஆராய்ச்சியாளர்கள் பற்றிக் கூறுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ஆனந்தகுமார் :

இலக்கியம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :