இலக்கியத்துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category தமிழ்த் தேசியம்
Publication தென்மொழி பதிப்பகம்
Formatpaper back
Pages 40
Weight50 grams
₹12.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866விலங்கினின்று மாந்தனை வேறு பிரிக்கும் சில கூறு பாடுகளில் தலையாயது மொழி. கல்லாத ஒருவனின்று கற்றவனை வேறுபடுத்திக் காட்டுவதும் மொழியே. பிறவிச் சிறப்புக்கும் கூட மொழியை அடிப்படையாக்குகின்றது வள்ளுவர் வாய்மொழி . தெளிவான மொழி தெளிவான எண்ணங்களின் வெளிப்பாடு. நன்றாக எண்ணத் தெரிந்த வன் நல்ல மொழியைப் பயன்படுத்துகின்றான். தெளிவற்றவனே மொழியைக் குழப்புகின்றான். பேச்சை அடிப்படையாகக் கொண்டிருந்த மொழி எழுத்தையும் அடியொற்றி வாழத் தொடங்கியது, மாந்த நாகரிகத்தின் இரண்டாவது படிநிலை! எனவே பேச்சும் எழுத்தும், மொழிக்குப் பிறந்த வீடும் புகுந்த வீடுமாகும். ஒரு பெண் பிறந்த வீட்டில் வளர்ச்சியுற்றுப் புகுந்த வீட்டில் மலர்ச்சி யுறுவதுபோல், மொழி, பேச்சு வழக்கில் வளர்ச்சியுற்று, எழுத்து வழக்கில் மலர்ச்சியுறுகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

தமிழ்த் தேசியம் :

தென்மொழி பதிப்பகம் :