இலக்கண உலகில் புதிய பார்வை (தொகுதி 3)

ஆசிரியர்: டாக்டர் பொற்கோ

Category இலக்கியம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 154
First EditionDec 2011
2nd EditionMar 2020
ISBN978-81-2340-671-8
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹120.00 $5.25    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழகத்தில் மிக நல்ல அளவுக்குத் தமிழ் நெஞ்சங்களின் வரவேற்பைப் பெற்ற இலக்கண உலகில் புதிய பார்வை வரிசையில் உங்கள கைகளில் தவழும் இந்த நூல் மூன்றாவது தொகுதியாக வெளி வருகிறது!
மரபிலக்கணங்களைப் புரிந்து கொண்டு போற்றவும் மொழி மேம்பாட்டுப் பணிகட்கும் இலக்கண உருவாக்கப் பணிகட்கும் மொழிக் கல்விக்கும் மொழியியற் கலை எந்த அளவு உதவுகிறது என்பதை நன்கு உணர்ந்து கொள்ளவும் இலக்கண உலகில் புதிய பார்வை சிறப்பாகக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உதவியிருக்கிறது. இந்தத் தொகுதியும் அந்த நோக்கில் பெரிதும் பயன்படும்.
எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் ஆகியவற்றோடு இந்தத் தொகுதியில் யாப்பு, பொருள் தொடர்பான ஆய்வுகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், தொடர்புடைமை கருதி மொழிக்கல்வி, மொழி மேம்பட்டு முதலான அறிதுறைகளைச் சார்ந்த ஆய்வுகளும் இந்தத் தொகுதியில் சேர்க்கப் பெற்றுள்ளன.
இந்த நூலிற் காணும் கட்டுரைகளில் பல பல்வேறு ஆய்வரங்கு களில் படிக்கப் பெற்றவை; பெரும்பாலும் எல்லாக் கட்டுரைகளும் ஆய்விதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் முன்பே வெளியிடப் பெற்றவை. இவற்றை ஒரு சேரத் தொகுத்து வழங்குவது ஆய்வுலகுக்குப் பயன்படும் என்றும் ஆய்வு வளர்ச்சிக்கு உதவும் என்றும் பெரிதும் நம்புகிறோம்.
இலக்கண உலகில் புதிய பார்வை வரிசையில் முன்பே இரண்டு தொகுதிகளை வரவேற்றுப் போற்றிய அன்புத் தமிழ் நெஞ்சங்கள் இந்தத் தொகுதியையும் உவப்போடு வரவேற்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் பொற்கோ :

இலக்கியம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :