இலக்கண உலகில் புதிய பார்வை (தொகுதி -2)

ஆசிரியர்: பொற்கோ

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 110
ISBN978-81-234-0670-3
Weight150 grams
₹60.00 ₹58.20    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலக மொழிகளிலேயே தொடர்ச்சியான நெடிய வரலாற்றைக் கொண்டதாய் இன்னும் எதிர்காலத்தில் விரிந்து பரந்து உயர்ந்து விளங்கத்தக்க வளர்ச்சிக் கூறுகளை உடையதாய்த் திகழ்கின்ற ஒரு உயர்தனிச் செம்மொழி தமிழ்தான் என்பது உண்மை . வெறும் புகழ்ச்சி இல்லை. புத்துலகத் தேவைகட்கு ஏற்பத் தமிழ்மொழியைப் புதுமைப் படுத்திக் கொள்ளவும் சிறந்த முறையில் சமுதாய வளர்ச்சிக்கு அதனைப் பயன்படுத்தவும் அறிவியல் நோக்கில் அமைந்த மொழி ஆராய்ச்சி நூல்கள் நமக்கு மிகவும் தேவை. அந்தத் தேவையை நிறைவேற்றத் தமிழுலகில் எழுந்துள்ள பல நூல்களில் இலக்கண உலகில் புதிய பார்வையும் ஒன்று என்பது அறிஞர் உலகுக்கு உடன்பாடாக இருக்கும் என மிகவும் நம்புகிறேன். 1973 இல் இலக்கண உலகில் புதிய பார்வை என்ற தலைப்பில் வெளிவந்த நூலைத் தமிழகம் ஏற்றுப் போற்றி இத்தகைய ஆய்வுக்கு ஊக்கமளித்தது. அந்த நூல் 1978 இல் இரண்டாம் பதிப்பாகவும் சில சீர்திருத்தங்களோடு வெளி வந்தது. அதே நெறியில் தொடர்ந்து நிகழ்ந்த ஆய்வின் பயனாக இப்போது உங்கள் கைகளில் தவழும் இந்தப் புதிய நூல் உருவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொற்கோ :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :