இறைவழியில் இனிய சுகப்பிரசவம்

ஆசிரியர்: ஃபஸ்லுர் ரஹ்மான்

Category உடல்நலம், மருத்துவம்
Publication ஹெல்த் டைம் பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 302
First EditionMay 2011
2nd EditionJan 2016
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$13       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் 1979ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர். அதைத் தொடர்ந்து 1982ம் ஆண்டு மேற்படிப்பையும் முடித்தவர். அவர் தன் 8 ஆண்டுகள் மருத்துவப் படிப்பில் கற்றுத் தேர்ந்தது என்னவெனில், ஆங்கில மருத்துவம் எந்தவொரு நோய்க்கும் மருத்துவம் புரிய தகுதியற்றது. இந்த மருத்துவத்தின் பக்கவிளைவுகள் ஒவ்வொரு சாதாரண நோயையும் உடலினுள்ளேயே அழுத்தி, வாழ்நாள் முழுமையிலும் அந்த நோயின் வீரியத்தை வளரச் செய்து, அதன் விளைவாக பல பாகங்களிலும், பல உறுப்புக்களிலும் தீய விளைவுகளை உருவாக்கக் கூடியது.
இந்த உண்மையை கண்கூடாக தன் ஆறு வருட மருத்துவத் தொழிலில் கண்டதன் விளைவாக அதனைக் கைவிட்டு 'அகுபங்சர் மருத்துவம்' 1984ல்ஆரம்பித்தார். அப்போது அகுபங்சர் மருத்துவம் சாதாரண தலைவலி, உடல் வலி போன்ற ஒருசில உபாதைகளுக்கு மட்டுமே உதவும் என்ற அளவில்தான் இருந்தது. இந்த நிலையிலிருந்த அகுபங்சர் மருத்துவத்தை மனித சமுதாயமே வியக்கக் கூடிய அளவுக்கு ஒரு மனிதனின் அனைத்து நோய்களுக்கும் நொடிப் பொழுதில் ஒரேயொரு ஊசி முனையின் தொடுதலைக் கொண்டு சுகமளிக்க முடியும் என்ற மாபெரும் அத்தாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அகுபங்சரில் மட்டுமல்ல, மருத்துவ உலகிலேயே மிகப்பெரும் புரட்சியாக அமைந்தது.
1997ம் ஆண்டு முடிய 14 ஆண்டுகள் அகுபங்சர் மருத்துவம் இவ்விதத்தில் உலக அளவில் பிரபலமாகியது. இந்த 14 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் ஆயுர்வேதம், சித்தா, மூலிகை வைத்தியம், இயற்கை வைத்தியம், மற்றும் ஹோமியோபதி போன்ற அனைத்து மருத்துவங்களும் இந்த காலகட்டத்தில் டி" புத்துயிரும், மறுவாழ்வும் பெற்றன. தமிழகத்தில் ஆங்கில மருத்துவம். பேரதிர்ச்சிக்குள்ளாகியது. ஒவ்வொரு ஆங்கில மருத்துவரும் அகுபங்சர் பட்டத்தை தங்கள் எம்.பி.பி.எஸ், எம்.டி பட்டங்களுடன் இணைத்துக் கொள்ளாவிட்டால் பிழைக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
2000ம் ஆண்டு துவக்கத்தில் டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அகுபங்சர் மருத்துவத்தைக் கைவிட்டார். அதைவிட உயர்ந்த, இறையருள் நிறைந்த, ஞானமிக்க இறைவழி மருத்துவம் என்ற புதிய சகாப்த்தம் உருவாகியது. ஒவ்வொரு நாளும் அகுபங்சர் மருத்துவத்தில் ஒன்றரை லட்சத்திற்கு மேல் சம்பாதித்து வந்த மருத்துவத்தை அடியோடு நிறுத்தினார். கடந்த 7 வருடங்களாக இறைவழி மருத்துவம் என்ற மகத்தான இந்தப் பாதையை முழு நம்பிக்கையுடன் மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த நன்மைக்காக டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறார். இனி, உலகம் அழியும் வரையில் இதற்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை


உங்கள் கருத்துக்களை பகிர :