இரும்பு குதிரைகள்

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 360
First EditionNov 1994
22nd EditionDec 2016
Weight300 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபாலகுமாரன் நாவல் என்றால் வாசகர்களுக்குக் கற்கண்டு போல இனிக்கும்.
காயல் பட்டணத்திலிருந்து சென்னைக்கு வந்தவர்கள் பழைய இரும்புச் சாமான்களை வாங்கி விற்கக் கடை போட்ட தால் காயலாங்கடை என்றாகிவிட்டது என்று நாவலாசிரியர் விளக்கம் தருவது சிரிப்பைத் தந்தாலும் சிந்திக்க வைக்கிறது.
உபயோகத்திற்கு உதவாத பழைய மோட்டார் வண்டியை நயமான விலைக்கு வாங்கிப் பிரித்து பாகங்களை உதிரியாக்கி அதிகமான விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் வியாபாரி களைப் படம் பிடித்துக் காண்பிக்கிறார் ஆசிரியர்.
தேங்காய் எண்ணெய் டின்னென்று சொல்லி சாராய டப்பிகளை லாரியில் ஏற்றி திருட்டு வியாபாரம் நடத்துவதை இந்நூலைப் படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மன்னார்குடியில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நாணு சார் சென்னைக்கு வருவதும் காந்திலால் சேட் டைச் சந்திப்பதும் வாசகர்களின் மனத்தை விட்டகலாதவை.
ஆட்டோமொபைல் பொறியாளருக்குக் கூடத் தெரியாத புரியாத பல நுட்பங்களை இந்நாவலில் காட்டியிருப்பது நாவலாசிரியரின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இந்நாவலை வெளியிடுவது எங்களுக்கும் பெருமை சேர்க்கிறது. நூலாசிரியருக்கு நன்றி.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :