இருபதாம் நுற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் தெ.பொ.மீ.

ஆசிரியர்: கி. பார்த்திபராஜா

Category இலக்கியம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 215
ISBN978-81-234-2003-5
Weight150 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதென்பட்டினம் பொன்னுசாமிக் கிராமணியாரின் மகனாகத் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் 08-01-1901-இல் பிறந்தார். 27-08-1980-இல் மறைந்தார். 1920-களின் பிற்பகுதியில் ஆய்வுக் களத்திற்கு வந்தவர் தெ. பொ. மீ. இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் முதன்மைப் பாத்திரம் வகித்த காங்கிரஸ் இயக்கத்தோடு தம்மை இணைத்துக்கொண்டவர். ஆர்வத்தின் காரணமாக ஆராய்ச்சித் துறையில் புகுந்து அதையே தமது வாழ்க்கையாக அமைத்துக்கொண்டவர். 1950வரை திருக்குறள் ஒப்பிலக்கணம் பற்றி மிகுதியும் ஆய்வு செய்திருந்தார். 1950-இல் புனேவிலுள்ள டெக்கான் கல்லூரி மொழியியல் கோடைப் பள்ளியை நடத்தியது. தெ. பொ. மீ. தமது 55-ஆவது வயதில் அப்பள்ளியில் மாணவராகச் சேர்ந்து கற்றார். அப்பள்ளியில் எமனோ, கத்ரே, கிரியர்சன், சுனீத்குமார் சட்டர்ஜி ஆகிய மொழியியல் அறிஞர்களின் அறிமுகத்தைப் பெற்றார். 1944ஆம் ஆண்டு கால்டுவெல் ஒப்பிலக்கணம் - அடிச்சொற்கள் என்னும் நூலை வெளியிட்ட தெ. பொ. மீ, தமது எம். ஓ. எல் பட்ட ஆய்வினைத் தமிழ் ஒலிகள் என்னும் தலைப்பில் நிகழ்த்தினார். அந்த ஆராய்ச்சிக் கருத்துக்களே தமிழ்க் கலைக்களஞ்சியத் தொகுதிகளில் தமிழ் எழுத்துக்களைப் பற்றிய கட்டுரைகளாகப் பிற்காலத்தில் எழுதி வெளியிடப்பட்டன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி. பார்த்திபராஜா :

இலக்கியம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :