இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

ஆசிரியர்: அ.ச.ஞானசம்பந்தன்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 232
Weight200 grams
₹85.00 ₹80.75    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எல்லாவற்றிற்கும் அடிப்படையாய் ஒரு சத்தி நிற்கிறது! அச்சத்தி வற்றாதது; எல்லையற்றது. அதன் முதல் எங்கேயோ, முடிவு எங்கேயோ! அதற்கு உலகம் வழங்கிய பெயர்கள் பலப்பல.
அப் பெரும் சத்தி, காலத் தேவைக்கு ஏற்றவாறு, தன் மாட்டு அமைந்துளள வற்றாக் கருவினின்றும் சிற்சில கூறுகளை வெளியிடுவதில் மரபு. அக்கூறுகள் முதல் முதல் கவிஞர் உள்ளத்தில் கனவாய்க் கருக்கொள்ளும்; பின்னே விஞ்ஞானியர் உள்ளத்தில் நினைவாய் உருக்கொண்டு பொருளாகும். இன்று கவிஞர் நெஞ்சில் கற்பனையாய் உலவும் ஒன்று, பன்னூறு ஆண்டு கடந்து, மெய்ஞ்ஞானியர் நெஞ்சில் பொருண்மையாய்த் திரளுதல் இயற்கை. கவிஞர் கற்பனைக் கனவில் என்றோ பறந்த விமானங்கள், இன்று வானத்தில் பறத்தல் கண்கூடு. விஞ்ஞான உலகிற்குத் தாயகம் காவிய உலகம் என்பதை மறத்தலாகாது.
கம்பர் ஒரு பெருங்கலைஞர்; கனவும் நினைவும் பொதுளிய ஒரு தமிழ்ச் சுரங்கம்; பெரிய கற்பனைக் களஞ்சியம். இத்தகைய கம்பர் பெருமானைப் பௌராணிக ஆட்சி சிறைப்படுத்தியது! என்னே! என்னே! சங்கம் கண்ட தமிழ்நாடே! உனக்கு ஐயோ! கம்பர் இந்நாளில் விடுதலை அடைந்தது கண்டு மகிழ்வெய்துகிறேன்! அவ் விடுதலை நல்கிய தோழர் சரவண. ஞானசம்பந்தர்க்கு எனது வாழ்த்து உரியதாகுக.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.ச.ஞானசம்பந்தன் :

இலக்கியம் :

விசா பப்ளிகேசன்ஸ் :