இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

ஆசிரியர்: அ.ச.ஞானசம்பந்தன்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 168
Weight250 grams
₹160.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இராவணன் தீமையே வடிவானவன் என்ற கருத்தினை மறுக்கும் வழியாக மேனாட்டுக் கருத்தினை விளக்கும் திறம், பாராட்டற்கு உரியது. பாவலன் படைத்த ஒருவனைப்பற்றி முடிவு கூற வேண்டுமானால், அவனைப்பற்றி அந்தப் பாட்டுலகில் பிறர் கூறும் கருத்துகளையும், கதைப் போக்கினையுமே அடிப்படையாகக் கொண்டு கூற வேண்டும் என மேனாட்டு அறிஞர் ஆராய்ந்து வருகின்றனர்.
அந்த முறையைப் பின்பற்றும் நம் ஆசிரியர், பழைய தமிழ் முறையையும் மறவாது, சொல் சொல்லாகச் சுவைத்துப் பேருரைகள் பல தருகின்றார். இராவணன் வீழ்ச்சியைக் 'கலைஞன் வீழ்ச்சி'யாகக் கூறுவது போற்றற்குரியது.யாழ்க்கொடி ஏந்தி, அகத்தியரோடும் இசையில் போட்டி போட்ட கலைஞனாக அன்றோ இராவணனைக் கம்பனும் காண்கின்றான்! ஆசிரியர் ஞானசம்பந்தர், இந்தப்பகுதியில் காட்டும் நுட்பம், சுவைஞர்க்கு என்றும் பெருவிருந்தாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.ச.ஞானசம்பந்தன் :

இலக்கியம் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :