இராமாயணம்

ஆசிரியர்: பிரபஞ்சன்

Category கட்டுரைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 344
ISBN978-93-84302-29-0
Weight350 grams
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வால்மீகியை நினைத்தால் எனக்கு ஆச்சரியமே மிஞ்சுகிறது. தன் முன் காவியங்கள் ஏதும் இல்லை. இல்லாத ஒரு மொழியில் காவியம் எழுத வால்மீகி முன் வந்தார். அவருக்கு முன் ராமன் பற்றிய நாட்டார் பாடல்களே இருந்திருக்கும். அந்த மூலாதாரத்தைக்கொண்டே ராமன் என்ற லட்சியத்தை அவர் வடிவமைத்தார். வால்மீகியின் காலத்தில் மக்கள் வாழ்க்கையின் லட்சியங்கள், நோக்கங்கள், மேன்மைகள் என்பன யாவை, கயமைகள் என்பன யாவை போன்ற வாழ்வின் நுண்மைகளை அவர் திரட்டிக் காட்டினார். சக்ரவர்த்தியின் குடும்பம் முதல் வேடுவர்த் தலைவன் வரை, அனுமன் முதல் சடாயு வரையிலான, ரிஷிகள் முதல் அசுரர் வரையிலான பல மனித மனோபாவங்களை அவர் எழுதிக்காட்டினார். ஆதி கவி என்று அவர் அழைக்கப்படுகிறார்.
வியாசரின் பாரதம் எனக்குப் பிடித்த மாபெரும் இந்திய இலக்கியப் படைப்பு எனில் இராமாயணம் மாபெரும் இந்திய இதிகாசங்களில் ஒன்று. கல்கியில் மகாபாரதத்தை 2014-ம் ஆண்டு எழுதி முடித்தபோது, இராமகதையையும் என் மொழியில், என் பார்வையில் எழுதிவிடலாம் என்று தொடங்கினேன். ஆகஸ்ட் 2015 தொடங்கி ஜூலை 2016 வரை இந்த இராமாயணத்தை எழுதி முடித்தேன். இராமாயணம் என்பது முடியக்கூடிய காவியம் இல்லை . ஏனெனில் இராவணர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
மகாபாரதமும் இராமாயணமும் நல்ல நூல்களாக எழுதப்பட்டு, நல்ல புத்தகங்களாக உருவாகி எனக்குத் திருப்தி தந்திருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரபஞ்சன் :

கட்டுரைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :